கருப்பை நார்த்திசுக் கட்டி
கருப்பை நார்த்திசுக்கட்டி (Uterine fibroid) என்பது கருப்பையினுள் உருவாகும் மென்மையான தசைக் கட்டிகள் ஆகும்.[1] பெரும்பாலும் இக்கட்டிகள் இருப்பதன் அறிகுறி சிலருக்கு ஏற்படுவதில்லை ஆனால் சிலருக்கு மாதவிடாயின் பொழுது மிகுந்த வலியும் அதிக குருதிப்பெருக்கும் ஏற்படும்.[1] இக்கட்டிகள் பெரிதாக வளர்கையில் சிறுநீர்ப்பையைத் தள்ளியபடி அழுத்தும். அதனால் அடிக்கடி சிறுநீர்க்கழிக்க உந்துதல் ஏற்படும்.[1] சிலவேளை பாலுறவின்போது மிகுந்த வலியை அல்லது முதுகெலும்பு வலியை ஏற்படுத்தலாம்.[1] ஒரு பெண்ணுக்கு ஒரு கருப்பை நார்த்திசுக்கட்டியோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டிகளோ இருக்கலாம்.[1] சில நேரங்களில் நார்த்திசுக்கட்டிகள் இருக்கும்போது கருத்தரித்தல் கடினமாக ஆகலாம்.ஆயினும் இது அனைவருக்கும் பொதுவானதல்ல.[1]
கருப்பை நார்த்திசுக் கட்டி | |
---|---|
சிறப்பு | மகளிர் நோய் மருத்துவவியல் |
அறிகுறிகள் | மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு[1] |
சிக்கல்கள் | மலட்டுத்தன்மை[1] |
காரணங்கள் | கண்டறியப்படவில்லை[1] |
சூழிடர் காரணிகள் | உடல் பருமன், சிவப்பு இறைச்சி உட்கொள்வது[1] |
சிகிச்சை | அறுவை சிகிச்சை[1] |
கருப்பை நார்த்திசுக்கட்டிகள் வருவதற்கான காரணம் இதுவரை தெளிபடுத்தப்படவில்லை.[1] ஆயினும் குடும்ப வழியாகவோ உடல் இயக்குநீரின் அளவுகளை வைத்தோ ஓரளவு தீர்மானிக்கப்படுகிறது.[1] உடற்பருமன், சிவப்பு இறைச்சி உட்கொள்ளுதல் ஆகியன கருப்பை நார்த்திசுக்கட்டிகள் உருவாவதற்கான ஆபத்தான காரணிகள் ஆகும்.[1] இடுப்பெலும்புச் சோதனை, மருத்துவப் படச்சோதனை ஆகியவை மூலம் இதனைக் கண்டறியலாம்.[1]
அறிகுறிகள் எதுவும் தென்படாதபோது எவ்வித சிகிச்சையும் தேவையில்லை.[1] ஆயினும் வலியுடன் குருதிப்போக்கு இருக்கும் பொழுது ஐபுரூபன், பாராசிட்டமால் ஆகியவை ஓரளவு பயன் தரும்.[1][2] கூடுதலாக இரும்புச்சத்துள்ள துணையுணவை அதிக உதிரப்போக்கின்போது எடுத்துக்கொள்ளலாம்.[1] கோனாடோட்ரோபின்- இயக்குநீர் வெளியீட்டு மருந்து வகைகள் மூலம் மருத்துவம் செய்தல் நார்த்திசுக்கட்டிகளின் அளவைக் குறைக்கக்கூடும் ஆனால் பக்க விளைவுகள் ஏற்படுவதோடு செலவும் அதிகமாகும்.[1] தீவிர அறிகுறிகள் தென்படுகையில் கட்டிகளை அகற்றவோ அல்லது கருப்பையை அகற்றவோ அறுவை சிகிச்சை உதவக்கூடும்.[1] கருப்பை தமனி நீக்கம் சில நேரஙகளில் பயன் தரும்.[1] புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய வகையைச் சேர்ந்த லெயோமையொசார்கோமா என்றழைக்கப்படும் நார் திசுக்கட்டிகள் மிகவும் அரிதாகும்.[1] இவை தீங்கற்ற நார்த்திசுக்கட்டிகளில் இருந்து உருவாவதில்லை.[1]
ஐம்பது வயது வரையுள்ள பெண்களில் 20 விழுக்காடு முதல் 80 விழுக்காடு பெண்களுக்கு கருப்பை நார்த்திசுக்கட்டிகள் வளர்கின்றன.[1] 2013 இல் சுமார் 171 மில்லியன் பெண்கள் இதனால் பாதிப்படைந்தார்கள்.[3] பொதுவாக மத்திய அல்லது பிந்தைய இனப்பெருக்க வயதுள்ளவர்களுக்கு இருப்பதாகக் கண்டறியப்பட்டது.[1] மாதவிடாய் நிறுத்த காலத்திற்குப் பின் இக்கட்டிகள் அளவில் சிறிதாகிவிடுகின்றன.[1] ஐக்கிய அமெரிக்காவில் கருப்பை நீக்கு அறுவை சிகிச்சைக்குப் பொதுவான காரணமாக கருப்பை நார்த்திசுக்கட்டிகள் அமைகின்றன.[4]
அறிகுறிகள்
தொகுகருப்பை நார்த்திசுக்கட்டி உள்ள பெண்களுக்கு பொதுவாக எந்த அறிகுறியும் காணப்படுவதில்லை. அடிவயிறு வலித்தல் இரத்த சோகை, அதிகமான குருதிப்போக்கு ஆகியன நார்த்திசுக்கட்டிகள் கருப்பையினுள் இருப்பதற்கான அடையாளங்கள் ஆகும். நார்த்திசுக்கட்டிகள் உருவாகியுள்ள இடத்தைப் பொறுத்து பாலியல் உறவின் போது வலி ஏற்படலாம். கருத்தரித்தபின் இக்கட்டிகள் காரணமாக கருச்சிதைவு,[5] குருதிப்போக்கு, முன்கூட்டியே பிறத்தல் அல்லது கருவின் நிலையில் குறுக்கீடு, ஆகியன ஏற்படலாம். மேலும் கருப்பை நார்த்திசுக்கட்டிகள் மலக்குடல் அழுத்தத்தை ஏற்படுத்தும். கருத்தரித்த பின் அடிவயிறானது கர்ப்பத் தோற்றத்தில் காணப்படுவதைவிட மிகவும் பெரிதாக இருக்கும்.[1] சில பெரிதான கட்டிகள் கருப்பைவாய் மற்றும் யோனிக்கு வெளியே வெளிப்பட்டுக் காணப்படும்.
பொதுவாக கருப்பை நார்த்திசுக்கட்டிகள் கொண்ட ஒரு பெண்ணுக்கு கருத்தரிக்காமைக்கு அக்கட்டிகள் காரணமாக இருப்பதில்லை. இக்கட்டிகள் காரணமாக மூன்று விழுக்காடு பெண்கள் மட்டுமே குழந்தை பெறமுடியாமல் இருக்கின்றனர்.[6] பெருவாரியான பெண்களுக்கு கருப்பை நார்த்திசுக்கட்டிகள் இருந்தும் கூட கருத்தரித்து சாதாரணமாகக் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர்.[7][8] சில நேரங்கள் தவறான இடத்தில் உருவாகும் நார்த்திசுக்கட்டிகள் கருமுட்டைச் செயலைத் தடுத்து மலட்டுத்தன்மையை உருவாக்கலாம்.[6]
அபாயக் காரணிகள்
தொகுகருப்பை நார்த்திசுக்கட்டி வளர்வதற்கான சில அபாயக் காரணிகள் மாறுபடக்கூடும். பொதுவாக உடற்பருமன் கொண்ட பெண்களுக்கு நார்த்திசுக்கட்டிகள் உருவாகின்றன. இனப்பெருக்கக் காலங்களில் (வயதில்) மட்டுமே அது தொடர்புடைய ஈத்திரோசன் புரோஜெஸ்திரோன் ஆகியவற்றைச் சார்ந்தே கருப்பைத் நார்த்திசுக்கட்டிகளின் வளர்ச்சி அமைகிறது.
உணவு
தொகுபழங்கள் காய்கறிகள் அதிகமாகவுள்ள உணவை எடுத்துக்கொள்ளுதல் நார்த்திசுக்கட்டிகள் வளரும் வாய்ப்பைக் குறைக்கிறது. நார்ச்சத்து, வைட்டமி ஏ, சி, இ, பைட்டோஸ்ட்ரோஜென்கள், கரோட்டினாய்டுகள், இறைச்சி, பால்பொருட்கள் ஆகியவை சில தெளிவற்ற விளைவுகளை ஏற்படுத்தும். சாதாரானமாக வைட்டமின் டி உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது நார்த்திசுக்கட்டிகள் வளர்வதைக் குறைக்கக்கூடிம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 1.23 1.24 1.25 1.26 "Uterine fibroids fact sheet womenshealth.gov". web.archive.org. 2015-07-07. Archived from the original on 2015-07-07. பார்க்கப்பட்ட நாள் 2022-11-17.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ Kashani, BN; Centini, G; Morelli, SS; Weiss, G; Petraglia, F (July 2016). "Role of Medical Management for Uterine Leiomyomas.". Best Practice & Research. Clinical Obstetrics & Gynaecology 34: 85–103. doi:10.1016/j.bpobgyn.2015.11.016. பப்மெட்:26796059.
- ↑ Global Burden of Disease Study 2013, Collaborators (5 June 2015). "Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 301 acute and chronic diseases and injuries in 188 countries, 1990-2013: a systematic analysis for the Global Burden of Disease Study 2013.". Lancet 386 (9995): 743–800. doi:10.1016/S0140-6736(15)60692-4. பப்மெட்:26063472.
- ↑ "Uterine myomas: an overview of development, clinical features, and management". Obstet Gynecol 104 (2): 393–406. August 2004. doi:10.1097/01.AOG.0000136079.62513.39. பப்மெட்:15292018. https://archive.org/details/sim_obstetrics-and-gynecology_2004-08_104_2/page/393.
- ↑ Metwally, Mostafa; Li, Tin-Chiu (2015). Reproductive Surgery in Assisted Conception. p. 107. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781447149538.
- ↑ 6.0 6.1 American Society of Reproductive Medicine Patient Booklet: Uterine Fibroids, 2003 பரணிடப்பட்டது 2008-07-03 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Proceedings from the Third National Institutes of Health International Congress on Advances in Uterine Leiomyoma Research: comprehensive review, conference summary and future recommendations". Human Reproduction Update 20 (3): 309–333. 2014. doi:10.1093/humupd/dmt058. பப்மெட்:24401287.
- ↑ "Proceedings from the Third National Institutes of Health International Congress on Advances in Uterine Leiomyoma Research: comprehensive review, conference summary and future recommendations". Hum. Reprod. Update 20 (3): 309–33. 2014. doi:10.1093/humupd/dmt058. பப்மெட்:24401287.