அசாம் ஒப்பந்தம்

அசாம் ஒப்பந்தம் (Assam Accord (1985)[1] அசாமில் குடியேறி வாழும் வங்காளதேச மக்களை அசாமிலிருந்து வெளியேற்றுதல் தொடர்பாக இந்திய அரசும், அசாமிய இயக்கமான அசாம் கண பரிசத்தும் [2]15 ஆகஸ்டு 1985 அன்று புதுதில்லியில் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி முன்னிலையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும்.[3][4]

பின்னணி தொகு

அசாமில் குடியிருக்கும் வங்காளதேச அகதிகளை அசாம் மாநிலத்திலிருந்து வெளியேற்றக் கோரி அனைத்து அசாம் மாணவர்கள் ஒன்றியம் 1979-ஆம் ஆண்டு முதல் அசாம் முழுவதும் கடுமையாக போராட்டங்கள் நடத்தியது. இதன் விளைவாக அசாமில் குடியேறிய வங்காளதேச மக்களை வெளியேற்ற இந்திய அரசு ஒப்புக்கொண்டு, அசாம் இயக்கத்தவர்களுடன் 1985-இல் அசாம் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதனால் வங்கதேச குடியேறிகளுக்கு எதிரான கலவரங்கள், வன்முறைகள் தற்காலிகமாக நின்றது.[5][6]

ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்கள் தொகு

அசாம் மாணவர்கள் இயக்கப் பிரதிநிதிகள் சார்பில்

  • பிரபுல்ல குமார் மகந்தா, தலைவர், அனைத்து அசாம் மாணவர்கள் ஒன்றியம்
  • பிருகு குமார் புகான், பொதுச் செயலாளர், அனைத்து அசாம் மாணவர்கள் ஒன்றியம்
  • தீரஜ் சர்மா, பொதுச் செயலாளர், அனைத்து அசாம் மாணவர்கள் ஒன்றியம்

இந்திய அரசின் பிரதிநிதிகள் சார்பாக

  • ஆர். டி. பிரதான், உள்துறை செயலாளர், இந்திய அரசு
  • பி. பி. திரிவேதி, முதன்மைச் செயலாளர், அசாம் மாநில அரசு

யார் முன்னிலையில்

வரலாறு தொகு

அசாம் ஒப்பந்தத்திற்குப் பின் அனைத்து அசாம் மாணவர்கள் ஒன்றியம், அசாம் கண பரிசத் எனும் அரசியல் கட்சியை துவக்கியது. 1985-இல் நடைபெற்ற அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அசாம் கண பரிசத் கட்சியின் மாணவர் இயக்கத் தலைவர் பிரபுல்ல குமார் மகந்தா அசாம் மாநில முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அசாம் கன பரிசத் கட்சி இரு முறை அசாம் மாநிலத்தில் 1985 - 1989 மற்றும் 1996 - 2001 என இரு முறை ஆட்சி அமைத்தது

ஒப்பந்தத்தின் விளைவுகள் தொகு

இந்த ஒப்பந்தத்திற்கிணங்க அசாம் மாநிலத்தில் மட்டும் இந்திய குடிமக்கள் பதிவேடு முறைப்படுத்தப்பட்டது. மேலும் டிசம்பர், 2019-இல் இந்திய நாடாளுமன்றத்தில் இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019 இயற்றப்பட்டது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாம்_ஒப்பந்தம்&oldid=2878472" இருந்து மீள்விக்கப்பட்டது