2016 அசாம் சட்டப் பேரவைத் தேர்தல்

(அசாம் சட்டமன்றத் தேர்தல், 2016 இலிருந்து வழிமாற்றப்பட்டது)


126 உறுப்பினர் கொண்ட அசாம் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.[1] இதில் பாயக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று பாசகவின் சரபானந்த சோனோவால் முதலமைச்சர் ஆனார்.

2016 அசாம் சட்டப் பேரவைத் தேர்தல்

← 2011 4 ஏப்ரல் 2016 (2016-04-04) — 11 ஏப்ரல் 2016 (2016-04-11) 2021 →

மொத்தம் உள்ள 126 இடங்களுக்கும் நடந்த தேர்தல் (பெரும்பான்மைக்கு 64 இடங்கள் தேவை)
அதிகபட்சமாக 64 தொகுதிகள் தேவைப்படுகிறது
  First party Second party
 
தலைவர் சர்பானந்த சோனாவால் தருண் குமார் கோகய்
கட்சி பா.ஜ.க காங்கிரசு
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
மசூலி (பழங்குடி) திதபார்
வென்ற
தொகுதிகள்
60 26
மாற்றம் Increase 55 53
மொத்த வாக்குகள் 4,992,185 5,238,655
விழுக்காடு 29.5 31.0%
தேதி நிகழ்வு
11 & 14 மார்ச் மனுத்தாக்கல் ஆரம்பம்
18 & 21 மார்ச் மனுத்தாக்கல் முடிவு
19 & 22 மார்ச் வேட்புமனு ஆய்வு நாள்
21 & 26 மார்ச் வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்
4 ஏப்ரல் முதல் கட்ட வாக்குப்பதிவு
11 ஏப்ரல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு
19 மே வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு

சில்சார், திசுப்பூர், கௌகாத்தி கிழக்கு, கௌகாத்தி மேற்கு உட்பட 10 தொகுதிகளில் வாக்கை தாளில் சரிபார்க்கும் வசதி செய்யப்பட்டது. பாசக போடோலாந்து மக்கள் முன்னணியுடன் கூட்டணி அமைத்தது.[2] முதல் கட்டமாக ஏப்பிரல் 4 அன்று 65 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக ஏப்பிரல் 11 அன்று 61 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றன. பாசகவும் அசாம் கன பரிசத்தும் கூட்டணி சேர்ந்துள்ளதாக அறிவித்தன.[3] முதல் கட்டத்தில் தனக்கு ஒதுக்கப்படாத பிசுவந்து, காளிகோன் தொகுதிகளில் அசாம் கன பரிசித்து வேட்பாளர்களை அறிவித்தது. அங்கு பாசகவுடன் நட்பு ரீதியான போட்டியிருக்கும் என்று கூறியது.[4] 126 உறுப்பினர் சட்டப்பேரவைக்கு பாசக 88 வேட்பாளர்களை அறிவித்தது.[5]

வாக்குப் பதிவு

தொகு
கட்டம் வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை வாக்குப்பதிவு சதவீதம்
முதற் கட்டம் 65 78% [6]
இரண்டாம் கட்டம் 61 78.09[7]

முடிவுகள்

தொகு
வரிசை கட்சி வென்ற தொகுதிகள்
1 பாசக 60
2 இந்திய தேசிய காங்கிரசு 26
3 அசோம் கன பரிசத் 14
4 அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 13
5 போடோலாந்து மக்கள் கூட்டணி 12
6 கட்சி சார்பற்றவர் 1

இவற்றையும் பார்க்கவும்

தொகு

இந்திய சட்டமன்றத் தேர்தல்கள், 2016

மேற்கோள்கள்

தொகு
  1. "EC announces poll schedule in five states; May 19 is Decision Day". indianexpress. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016.
  2. "BJP forms alliance with Bodoland Peoples' Front for Assam elections". timesofindia. பார்க்கப்பட்ட நாள் 13 March 2016.
  3. "BJP, AGP to jointly fight Assam Assembly polls". த இந்து. பார்க்கப்பட்ட நாள் 13 March 2016.
  4. "Assam polls: AGP first list out, 'friendly fight' with BJP in some seats". indianexpress. பார்க்கப்பட்ட நாள் 13 March 2016.
  5. "BJP Announces Names Of 88 Candidates For Assam Assembly Elections". ndtv. பார்க்கப்பட்ட நாள் 13 March 2016.
  6. "Live: 78% polling in Assam first phase". thehindu. பார்க்கப்பட்ட நாள் சூன் 4, 2016.
  7. "2016 Assam Assembly Elections: Phase 2: As it happened". thehindu. பார்க்கப்பட்ட நாள் 21 April 2016.