அசாம் கண பரிசத்

இந்திய அரசியல் கட்சி
(அசோம் கன பரிசத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அசோம் கண பரிசத்- அசாம் கண பரிஷத் (Asom Gana Parishad-Assam Peoples Association-அசாம் மக்கள் கூட்டமைப்பு) இந்தியாவின் அசாம் மாநில அரசியல் கட்சியாகும். மார்ச், 1971-க்குப் பிறகு அசாம் மாநிலத்தில் குடியேறிய வங்காளதேச அகதிகளை வெளியேற்றுவது குறித்து அனைத்து அசாம் மாணவர் ஒன்றியம் பெரும் போராட்டங்கள் செய்தது. இதற்கு தீர்வு காண இராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசும், அனைத்து அசாம் மாணவர் ஒன்றிய அமைப்பினரும் 15 ஆகஸ்டு 1985 அன்று புதுதில்லியில் அசாம் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

அசோம் கண பரிசத்
தலைவர்சந்திர மோகன் பட்டோவரி
தொடக்கம்1985
தலைமையகம்கோபிநாத் போர்டோலாய் சாலை, குவகாத்தி -781001
கொள்கைஅசாம் தேசியவாதம்
கூட்டணிவடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி
இணையதளம்
http://www.agpassam.org
இந்தியா அரசியல்

பின்னர் அனைத்து அசாம் மாணவர் ஒன்றியத்தால் 1985-இல் அசோம் கண பரிஷத் எனும் அரசியல் கட்சி நிறுவப்பட்டது. [1]1985 அசாம் உடன்பாட்டுக்குப்பின் நடைபெற்றத் தேர்தலில் பிரபுல்ல குமார் மகந்தா அசாம் மாநில இளவயது முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அசாம் கன பரிசத் கட்சி இரு முறை ஆடசி அமைத்தது 1985 முதல் 1989 மற்றும் 1996 முதல் 2001 வரை.

தற்போது இக்கட்சி வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியில் உள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாம்_கண_பரிசத்&oldid=3753590" இலிருந்து மீள்விக்கப்பட்டது