அசிசா சித்திக்கு

ஆப்கானித்தான் செயற்பாட்டாளர்

அசிசா சித்திக்கு (Aziza Siddiqui) ஆப்கானித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு சமுகச் செயற்பாட்டாளர் ஆவார். 1983 ஆம் ஆண்டு இவர் பிறந்தார்.[1][2] ஆப்கானித்தான் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஆக்சன் எய்டுடன் இணைந்து பெண்களின் உரிமைகள் தொடர்பான ஒருங்கிணைப்பாளராக இருந்தார். கிராமப்புற ஆப்கானிய பெண்களின் நிலைமை குறித்து ஆய்வுகள் செய்தார். பெண்களின் உரிமைகள் குறித்து அவர்களுக்கு கல்வி அளித்தார். தனிப்பட்ட முறையில் இப்பணிக்காக அச்சுறுத்தப்பட்ட போதிலும் முடிவுகள் எடுத்து செயல்படுவதில் பெண்களுக்குத் தொடர்ந்து பயிற்சிகளை ஏற்பாடு செய்தார்.[2][3][4]

2007 ஆம் ஆண்டில் அசிசா சித்திக்கு

ஆப்கானித்தானில் பிறந்த அசிசா சித்திக்கு, போரின் காரணமாக எட்டு வயதாக இருக்கும் போது பாக்கித்தானுக்குப் புறப்பட்டார். ஆனால் 2003 ஆம் ஆண்டு பெண்களின் உரிமைகளுக்காகப் பணியாற்றுவதற்காக ஆப்கானித்தானுக்குத் திரும்பினார். 2007 ஆம் ஆண்டில் பன்னாட்டு வீரப் பெண் விருதைப் பெற்றார்.[1] இருப்பினும், இவருடைய புகழின் காரணமாக பாதுகாப்பாக ஆப்கானித்தானுக்குத் திரும்ப முடியவில்லை. எனவே இவர் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார்.[1]

முதியோர், ஊனமுற்ற புலம்பெயர்ந்தோர், தஞ்சம் அடைந்தவர்கள், அகதிகள் ஆகியோருக்கு உதவும் இருமொழி பன்னாட்டு உதவியாளர் சேவைகளுக்கான பணியாளராக 2008 ஆம் ஆண்டு முதல் பணியாற்றத் தொடங்கினார்.[1] 2009 ஆம் ஆண்டில், கலை மற்றும் கலைக் கல்வியின் மூலம் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் கீதானா தயாரிப்பு நிறுவனம் வழங்கும் "ஆண்டின் அசாதாரண சாதாரண நபர்" என்ற விருதை சித்திக் பெற்றார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Next generation: Afghan-born woman helps other immigrants cross cultural, legal bridges in St. Louis பரணிடப்பட்டது ஆகத்து 14, 2014 at the வந்தவழி இயந்திரம், STLBeacon, Retrieved 12 July 2016
  2. 2.0 2.1 Department Of State. The Office of Electronic Information, Bureau of Public Affairs (2007-03-07). "Honorees". 2001-2009.state.gov (in ஆங்கிலம்). Archived from the original on 2019-08-08. பார்க்கப்பட்ட நாள் 2019-08-15.
  3. "IIP Publications -". IIP Publications (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-15.
  4. AWIU » 2007 WOC – Aziza Siddiqui பரணிடப்பட்டது திசம்பர் 13, 2014 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிசா_சித்திக்கு&oldid=3857633" இலிருந்து மீள்விக்கப்பட்டது