அசிதாலியா குன்றுகள்

செவ்வாய் கோளில் காணப்படும் குன்றுகள்

அசிதாலியா குன்றுகள் (Acidalia Colles) என்பவை செவ்வாய் கோளில் அமைந்துள்ள குன்றுகளின் குழுவுக்கு வைக்கப்பட்டுள்ள பெயராகும். செவ்வாய் கோளின் 50.9 ° வடக்கு அட்சரேகை மற்றும் 23.1 ° மேற்கு தீர்க்கரேகையில் அமைந்துள்ள மரே அசிடாலியம் நாற்கர வரைபடத்தில் இந்த குன்றுகளின் குழு காணப்படுகிறது. சுமார் 360 கி.மீ நீளம் கொண்ட இக்குன்று மரபுவழியான எதிரொளித் திறன் அடிப்படையில் பெயரிடப்பட்டது.[1] குன்று என்ற சொல் சிறிய மலை அல்லது குமிழ் என்ற பொருளில் இங்கு பயன்படுத்தப்படுகிறது.[2] அசிதாலியா குன்றுகளில் நீர் செல்வழி பள்ளத்தாக்கு நிலத்தோற்றங்கள் காணப்படுகின்றன.

அசிதாலியா குன்றுகள்
Acidalia Colles
அசிதாலியா குன்றுகளின் ஒரு பகுதி
பட அளவு 100×100 கிலோ மீட்டர்
மரே அசிதாலிய நாற்கர வரைபடம். இவ்வரைபடத்தில் லோமோனோசோவ் பள்ளப்பகுதியையும் குனோவ்சிகை பள்ளளப் பகுதியையும் காணலாம். சைதோனியாவிற்கு அருகிலுள்ள புகழ் பெற்ற செவ்வாய் கோளில் முகம் என்ற நிலத்தோற்றமும் இந்நாற்கர வரைபடத்தில் இடம்பெற்றுள்ளது.
அசிதாலியா குன்றுகளில் காணப்படும் நீர் செல்வழி தடங்களும் பிற தோற்றங்களும். அளவீடு 1,000 m (0.62 mi).

மேற்கோள்கள்

தொகு
  1. Blue, Jennifer. "Acidalia Colles". Gazetteer of Planetary Nomenclature. USGS Astrogeology Research Program.
  2. "Descriptor Terms (Feature Types)". Gazetteer of Planetary Nomenclature. International Astronomical Union (IAU) Working Group for Planetary System Nomenclature (WGPSN). Archived from the original on 2014-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிதாலியா_குன்றுகள்&oldid=3110836" இலிருந்து மீள்விக்கப்பட்டது