அசுணமா (இலக்கியம்)

சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு இசையறி விலங்கினம்

அசுணமா என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு இசையறி விலங்கினம் ஆகும். எட்டுத்தொகை நூல்களில் இது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விலங்கினம் அடர்ந்த காடுகளில் வாழ்ந்து வந்தது. இதன் சிறப்பம்சம், இசையை உணர வல்லது. இசைக்கு மயங்கும் தன்மை கொண்டது. ஆனால் மிகவும் பலமானது. எனவே இதை எதிர்த்து நின்று வேட்டையாடுவது என்பது கடினம். இதை உணர்ந்த வேட்டுவர்கள் இந்த விலங்கை வேட்டையாட, மனதை மயக்கும் அழகிய இசையை இசைக்கருவிகள் கொண்டு மீட்டுவர். அந்த இசைக்கு மயங்கி, அசுணமா இசை கேட்கும் திசை நோக்கி நகர்ந்து வரும். இசை மயக்கத்தில் அருகில் நெருங்கி வந்ததும், காதைக் கிழிக்கும் அளவுக்கு சத்தமான ஒலியை பறை போன்ற இசைக்கருவிகளால் ஏற்படுத்துவர். அந்த சப்தத்தைக் கேட்டு தாங்க முடியாத காது வலியால் மிரண்டுவிடும். அந்த சூழ்நிலையில் ஆயுதங்களால் தாக்கி கொன்றுவிடுவர். அழகான இசை மீட்டி ஏமாற்றி வரவழைத்து, மிக அதிகமான சத்தம் உண்டாக்கி துடிக்கவிட்டு அசந்த நேரம் பார்த்து ஆயுதங்களால் தாக்கி வஞ்சகமாக கொன்றுவிடுவர்.[1]
யானை மதத்தில் மொய்க்கும் வண்டுகளின் ஒலியை யாழின் ஒலியோ என அசுணம் கேட்கும் [2]

மேற்கோள்

தொகு
  1. மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது, 10
    அறை கொன்று, மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச,
    பறை அறைந்தாங்கு, ஒருவன் நீத்தான் அவனை
    அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின், யானும்
    நிறை உடையேன் ஆகுவேன் மன்ற மறையின் என்
    மென் தோள் நெகிழ்த்தானை மேஎய், அவன் ஆங்கண் 15
    சென்று, சேட்பட்டது, என் நெஞ்சு
    - கலித்தொகை 143

  2. இரும் புலி தொலைத்த பெருங் கை யானைக்
    கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் 10
    இருஞ் சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ் செத்து,
    இருங் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும் - அகநானூறு 88

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுணமா_(இலக்கியம்)&oldid=3826072" இலிருந்து மீள்விக்கப்பட்டது