அசுதியோ பாங்கோ அணை

அசுதியோ பாங்கோ அணை (Hasdeo Bango Dam) என்பது 1961-62ஆம் ஆண்டு இந்தியாவின் சத்தீசுகரில் உள்ள அசுதியோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். இது சத்தீசுகரின் மிக நீளமான, அகலமான அணை மற்றும் சத்தீசுகரின் முதல் பல்நோக்கு நீர் திட்டமாகும். இது கோர்பா மாவட்டத்தின் தலைநகரிலிருந்து 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த அணை 6,730 சதுர கி.மீ. நீர்ப்பிடிப்புப் பகுதியைக் கொண்டுள்ளது.[1] இந்த அணையானது 2.89 கன கிமீ (102.07 tmc ft) பெரிய பயனுள்ள சேமிப்புத் திறனைக் கொண்டுள்ளது. இது 120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. அசுதியோ பாங்கோ அணை கசேடோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த ஆறு சுமார் கடல் மட்டத்திலிருந்து 910.0 m (2,985.6 அடி) உயரத்தில் உருவாகிறது. இந்த ஆற்றின் மொத்த நீளம் 333.0 km (206.9 mi) ,

மேலும் பார்க்கவும்

தொகு
  • சத்தீஸ்கரில் சுற்றுலா
  • சத்ரெங்கா, சத்தீஸ்கர்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுதியோ_பாங்கோ_அணை&oldid=3781358" இலிருந்து மீள்விக்கப்பட்டது