அசுவதி பி டீ பீ - 37 (நெல்)
அஸ்வதி பி டீ பீ - 37 (Aswathi (PTB-37) என்பது; 1973 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, குறுகியகால நெல் வகையாகும்.[1] சுமார் 117 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், டீ - கீ - வூ - ஜென் (Dee-gee-woo-gen) என்ற நெல் இரகத்தையும், பி டீ பீ - 10 (PTB-10) எனும் நெல் இரகத்தையும் இணை சேர்த்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். ஒரு எக்டேருக்கு சுமார் 5000 கிலோ (50 Q/ha) மகசூல் தரவல்ல இதன் அரிசி, வெள்ளை நிறத்தில் நீண்டு, மிதமாக தடித்துக் காணப்படுகிறது. மேலும் இவ்வகை நெற்பயிர் கேரளம் மாநிலத்தில் அதிகளவில் பயிரிடப்படுகிறது.[2]
அசுவதி பி டீ பீ - 37 |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
டீ - கீ - வூ - ஜென் x பி டீ பீ - 10 (Dee-gee-woo-gen x PTB-10) |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
120 நாட்கள் |
மகசூல் |
5000 கிலோ, 1 எக்டேர் |
வெளியீடு |
1973 |
மாநிலம் |
கேரளம் |
நாடு |
இந்தியா |
சான்றுகள்
தொகு- ↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Details of Rice Varieties : Page 1 - 10 - Aswathi (PTB-37)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.