அசோகச் சக்கர விருது

இந்தக் கட்டுரை அசோகச் சக்கரம் விருது குறித்தானது. இந்திய அரசு இலச்சினை, அசோகச் சக்கரத்தினைக் குறித்த தகவல்கள் அறிய காண்க: அசோகச் சக்கரம்.

அசோகச் சக்கரம்


விருது குறித்தத் தகவல்
வகை அமைதிக்கால வீரச்செயல்
பகுப்பு தேசிய வீரம்
வழங்கப்பட்டது இந்திய அரசு
முந்தைய பெயர்(கள்) அசோகச் சக்கரம், முதலாம் வகுப்பு
(1967 வரை)
விருது தரவரிசை
இல்லை ← அசோகச் சக்கரம்கீர்த்தி சக்கரம்

அசோகச் சக்கரம் (Ashoka Chakra) இந்தியப் படைத்துறையினால் போர்க்களத்தில் அல்லாது அமைதிக்காலத்தில் படைவீரர்கள் வெளிப்படுத்தும் மிக உயரிய வீரதீரச் செயல்களுக்காகவும் தன்னலமற்ற உயிர்த்தியாகத்திற்காகவும் வழங்கப்படுகின்றன.[1] இது போர்க்காலத்தில் நிகழ்த்திய வீரச்செயல்களுக்கு வழங்கப்படும் பரம வீரச் சக்கரத்திற்கு இணையானது. இந்த விருது படைத்துறையில் அல்லாமல் குடிமக்களுக்கும் வழங்கப்படலாம்; மறைவிற்குப் பின்னரும் வழங்கப்படலாம்.

இரண்டாம் முறையாகப் பெறுவோருக்கு பதக்கத்தின் நாடாவில் ஆடைப்பட்டயம் வழங்கப்படும். இந்த விருது பெற்றோர் பிற வீரச்செயல்களுக்காக கீர்த்தி சக்கரம் அல்லது சௌர்யா சக்கரம் பெற தடை இல்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோகச்_சக்கர_விருது&oldid=3799469" இலிருந்து மீள்விக்கப்பட்டது