அசோக் கஜபதி ராஜு

அசோக் கஜபதி ராஜு, ஆந்திரப் பிரதேச அரசியல்வாதி. இவர் தெலுங்கு தேசக் கட்சியின் உறுப்பினர். இவர் 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் விஜயநகரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். வெற்றி பெற்று, பதினாறாவது மக்களவை உறுப்பினர் ஆனார். இவர் 1951-ஆம் ஆண்டின் ஜூன் 26-ஆம் நாளில் பிறந்தார். இவர் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள விஜயநகரத்தைச் சேர்ந்தவர். 2014-ஆம் ஆண்டின் மே 27-ஆம் நாளில் இருந்து வான்வழிப் போக்குவரத்துத் துறைக்கான அமைச்சராகப் பணியேற்றார்.[1]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_கஜபதி_ராஜு&oldid=3230922" இலிருந்து மீள்விக்கப்பட்டது