அசோக சென்
அசோக சென், (অশোক সেন) (பிறப்பு 1956), வேந்தியக் குமுகப் பேராளர் (FRS), ஓர் இந்தியக் கருத்திய இயற்பிலாளர். இயற்பியலில் இழைக்கொள்கை (string theory) என்னும் துறையில் வல்-மென் பிணைப்பின் இருமைத்தன்மைக் கொள்கை (strong-weak coupling duality or S-duality), பற்றிய இவருடைய கருத்தாக்கம் புகழ்பெற்றது[1].
அசோக சென் অশোক সেন | |
---|---|
2019 இல் அசோக சென் | |
பிறப்பு | 1956 (அகவை 67–68) |
தேசியம் | இந்தியர் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | பெர்மி ஆய்வகம் இசுட்டான்போர்டு நேர்கோட்டுத் துகள் முடுக்க மையம் டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகம் அரீசு சந்திரா ஆய்வு நிறுவனம் |
கல்வி கற்ற இடங்கள் | மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் இசுட்டோனி புரூக் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | சியார்ச்சு இசுத்தெமன் (George Sterman) |
1975 ஆம் ஆண்டு அசோக சென் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளநிலைப் பட்டம் பெற்றார், அதன்பின்பு மூன்றான்டுகள் கழித்து கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக்கழகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். இவர் தன்னுடைய முனைவர் பட்டத்தை அமெரிக்காவில் நியூ யார்க்கு மாநிலத்தில் உள்ள இசுட்டோனி புரூக்கு பல்கலைக்கழகத்தில் 1982 இல் பெற்றார். அதன் பின் மூன்றாண்டுகள் வெர்மி செய்களத்திலும் (Fermlab), மேலும் இரண்டரை ஆண்டுகள் இசுடான்போர்டு நேர்கோடு துகள்முடுக்க நடுவகத்திலும் (SLAC) பணியாற்றினார். 1988 இல் இந்தியாவுக்குத் திரும்பி டாட்டா அடிப்படை ஆய்வுக்கான கழகத்தில் சேர்ந்தார். 1995 இல் அரீசு சந்திரா ஆய்வுக் கழகத்தில் முழுப் பேராசிரியராகப் பணியேற்றார். 1988 உக்கும் 2003 உக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், ஐக்கிய இராச்சியத்தில் கேம்பிரிட்சில் உள்ள ஐசாக்கு நியூட்டன் கல்விக்கழகத்தில் இராத்துச்சைல்டு வருகைப் பேராசிரியராகவும், 2003, 2004 ஆம் ஆண்டுகளில் எம்.ஐ.டி-யில் மார்னிங்சிட்டார் வருகைப் பேராசிரியராகவும் (Morningstar Visiting Professor) இருந்தார். இவர் அரீசுச் சந்திரஆ கல்விக்கழகத்தில் பணியாற்றும் முனைவர் சுமதி இராவைத் திருமணம் செய்துள்ளார்.
பெருமைகளும் பரிசுகளும்
தொகுஅசோக சென் 1989 இல் அபுதுசு சலாம் கருத்திய இயற்பியலுக்கான அனைத்துலக நடுவத்தின் (Abdus Salam International Centre for Theoretical Physics) பரிசாகிய ஐ.சி.டி.பி பரிசை வென்றார்[2], பின்னர் 1994 இல் சாந்தி சொரூப்பு பட்நாகர் பரிசை வென்றார்; 2001 ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்மசிறீ பெருமைப்பட்டமும், 1998 இல் ஐக்கிய இராச்சியத்தில் வேந்தியக் குமுகத்தின் பேராளர் (FRS) பட்டமும் பெற்றார். 2009 ஆம் ஆண்டு கணிதவியலுக்கான இன்போசிசுப் பரிசு (Infosys Prize) பெற்றார்.
உருசிய இயற்பியலாளரும் தொழில்முனைவோருமான இயூரி மில்னர் இயற்பியலுக்காக உருவாக்கிய அடிப்படை இயற்பியல் இயூரி மில்னர் பரிசை ஆகத்து 1, 2012 இல் வென்றார்[3]
அடிக்குறிப்புகளும் பேற்கோள்களும்
தொகு- ↑ Ashoke Sen (1994). "Dyon - monopole bound states, selfdual harmonic forms on the multi - monopole moduli space, and SL(2,Z) invariance in string theory". Phys. Lett. B329: 217–221. doi:10.1016/0370-2693(94)90763-3. Bibcode: 1994PhLB..329..217S.
- ↑ "ICTP Prize Winner 1989". பார்க்கப்பட்ட நாள் 2009-11-17.
- ↑ New annual US$3 million Fundamental Physics Prize recognizes transformative advances in the field பரணிடப்பட்டது 2012-08-03 at the வந்தவழி இயந்திரம், FPP, accesed 1 August 2012
- Thomson Honours Leading Indian Scientists பரணிடப்பட்டது 2007-03-12 at the வந்தவழி இயந்திரம் Five people receive the "Thomson Citation Laureate Award", including physics professor Ashoke Sen of the Harish-Chandra Research Institute.
- The Hindu, Sunday, January 7, 2001: Stringing together the ultimate law பரணிடப்பட்டது 2010-08-11 at the வந்தவழி இயந்திரம் States that Dr. Ashoke Sen of HRI has "made several important contributions to the சரக் கோட்பாடு".
வெளி இணைப்புகள்
தொகு- Home page
- Ashoke Sen CV
- "Thomson Honours Leading Indian Scientists" பரணிடப்பட்டது 12 மார்ச்சு 2007 at the வந்தவழி இயந்திரம்
- The Hindu, Sunday, January 7, 2001: "Stringing together the ultimate law"[usurped!]
- "Profile of Top 25 scientists in India". India Today. 11 September 2011. https://www.indiatoday.in/india/photo/profile-of-top-25-scientists-in-india-366262-2011-09-11.
- பொதுவகத்தில் Ashoke Sen (physicist) தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.