அச்சன்கோவில் தர்மசாஸ்தா

அச்சன்கோவில் தர்மசாஸ்தா பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட கோயில் இது. அச்சன்கோவிலில் அமைந்த சாஸ்தாவின் சிலை மிகப்பழமை வாய்ந்தது. இங்கே அய்யப்பன் வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சி அளிக்கிறார். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை எனும் இரு தேவியர் மலர் தூவுவது போன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐய்யப்பனை கல்யாண சாஸ்தா என்று அழைக்கின்றனர். இவரை வழிபட திருமணத்தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அச்சன்கோவில் சாஸ்தா கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:கொல்லம்
அமைவு:அச்சன்கோவில்
ஆள்கூறுகள்:9°05′30.5″N 77°07′17.8″E / 9.091806°N 77.121611°E / 9.091806; 77.121611
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரள பாரம்பரிய பாணி

அமைவிடம் தொகு

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பத்தனாபுரம் வட்டத்தில் உள்ள கோவிலாகும். பரசுராமர் நிறுவிய ஐந்து கோயில்களில் இதுவும் ஒன்று. தமிழக பக்தர்கள் அதிகளவில் கூடுமிடங்களில் இதுவும் ஒன்று. இது நிறுவப்பட்ட ஆண்டு கொல்ல வருடம் 1106 மகரம் 12ம் நாள்.

போக்குவரவு வசதிகள் தொகு

தமிழ்‌நாட்டின், செங்கோட்டையிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுபாதை வழியாக அச்சன்கோவில் அய்யப்பன் கோயிலுக்கு செல்லலாம். [1].

உற்சவ விழா தொகு

தனு மாதத்தின் முதல் பத்து நாட்கள் மண்டலபூஜை நடைபெறும். மகர மாதத்தில் ரேவதிபூஜையும் நிகழும். மண்டலபூஜையில் தேரோட்டமும் ரேவதிபூஜையில் புஷ்பாபிஷேகவும் முதன்மையான சடங்குகள். மூன்றாம் உற்சவத்தில், சிறிய தேரில் வர்ண ஆடை ஆபரணங்கள் அணிந்து, வாளும் பரிசயும் கையிலேந்தியுள்ள அய்யப்பனின் விக்ரகம் வரும். இதை மணிகண்டமுத்தய்யசுவாமியின் எழுந்தருளல் என்பர். ஒன்பதாம் உற்சவத்தின் போது, சக்கரங்கள் கொண்ட பெரிய ரதத்தில் எழுந்தருளுவார்.

சான்றுகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-02. பார்க்கப்பட்ட நாள் 2013-10-15.

வெளி இணைப்புகள் தொகு