அச்சலைட்டு
அச்சலைட்டு (Achalaite) என்பது (Fe2+,Mn)(Ti,Fe3+,Ta)(Nb,Ta)2O8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிமம் ஆகும். வோட்கிணைட்டு குழுவைச் சேர்ந்த இக்கனிமம் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது. 2013 ஆம் ஆண்டில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.[2]
அச்சலைட்டு Achalaite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | (Fe2+,Mn)(Ti,Fe3+,Ta)(Nb,Ta)2O8 |
இனங்காணல் | |
நிறம் | கருப்பு |
படிக இயல்பு | இழைகள் |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
மோவின் அளவுகோல் வலிமை | 5.5 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
கீற்றுவண்ணம் | கருப்பு |
ஒப்படர்த்தி | 6.285 |
அடர்த்தி | 6.285 கி/செ.மீ3 |
பலதிசை வண்ணப்படிகமை | வேற்றுருத் தோற்றம் அற்றது |
மேற்கோள்கள் | [1] |
ஒற்றைச்சரிவச்சுப் படிக அமைப்பில் அச்சலைட்டு படிகமாகிறது. கருப்பு நிறத்துடன் உலோக பளபளப்பைக் கொண்டுள்ளது. அச்சலைட்டின் மோவின் கடினத்தன்மை மதிப்பு 5.5 ஆகவும் ஒப்படர்த்தி 6.285 ஆகவும் உள்ளது.[3]
புட்பராகம்- மற்றும் தாண்டலைட்டு கனிமங்களைக் கொண்டுள்ள பெக்மாடைட்டு பாறைகளின் இடைநிலை மண்டலத்தில் அச்சலைட்டு தோன்றுகிறது.[3] உரூட்டைல், குவார்ட்சு, ஆல்பைட்டு போன்ற கனிமங்கள் இதனுடன் தொடர்புடைய கனிமங்களாக கலந்து காணப்படுகின்றன.[1]
கனிமத்தின் பெயர் அதன் இருப்பிடப் பெயரிலிருந்து வந்ததாகும். அர்ஜென்டினாவின் கோர்டோபாவில் உள்ள அச்சலா பாத்தோலித்து என்ற இடத்தில் அச்சலைட்டு கனிமம் கிடைக்கிறது. கனிமமானது 2013-103 என்ற சுருக்கத்துடன் பன்னாட்டு கனிமவியல் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது.[1]
பன்னாட்டு கனிமவியலாளர் சங்கம் அச்சலைட்டு கனிமத்தை Ahl[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Achalaite". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.
- ↑ "The New IMA List of Minerals – A Work in Progress – Updated: July 2016" (PDF). International Mineralogical Association COMMISSION ON NEW MINERALS, NOMENCLATURE AND CLASSIFICATION. Archived from the original (PDF) on 9 September 2016. பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.
- ↑ 3.0 3.1 "Achalaite Fe2+TiNb2O8" (PDF). Handbook of Mineralogy. பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.