அச்சுதக் களப்பாளன்
அச்சுதக் களப்பாளன் களப்பிர மன்னர்களுள் ஒருவனாவான். மூவேந்தர்களையும் சிறை வைத்தவனெனக் கருதப்படுபவன் இவனாவான். தமிழ் நாவலர் சரிதை கூறுவது போன்று பாண்டிய நாடு இவனது ஆட்சிக்குக்கீழ் வந்தது. [1]
அமிர்தசாகரர், மற்றும் புத்ததத்தர் இருவரும் இவனைப் பற்றிக் கூறியுள்ளனர். புத்ததத்தர் அச்சுதக் களப்பாளன் தமிழகத்தினை ஆண்டதனால் உலகினை ஆட்சி செய்தான் எனப் புகழ்ந்தும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. [2]புத்த சமயப் புலவர்களையும், புத்த மடங்களையும் இவன் ஆதரித்தான்[3].
மூர்த்தி நாயனார் அச்சுத களப்பாளன் காலத்தில் வாழ்ந்தவரென்பதும் குறிப்பிடத்தக்கது. மணிமேகலை காலத்துப் பூதமங்கலம் பௌத்தர்களுடையது கி.பி. 660 ஆம் ஆண்டளவில் புத்த மதத்தினர் சம்பந்தருடன் வாதிட்டுத் தோற்றுப் போனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 'புத்தர் விஹாரம்' களப்பிர மன்னனான அச்சுத களப்பாளனால் செய்யப்பட்டது. யாப்பருங்கல விருத்தி என்னும் நூலில் இவனது படைகளின் போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ . களப்பிர மன்னர்கள்
- ↑ களப்பிரர் வரலாற்றுச் சான்றுகள்
- ↑ Hermann Kulke and Dietmar Rothermund (2002). A history of India (PDF). London: Taylor & Francis e-Library. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-203-44345-4. Archived from the original (PDF) on 2015-06-16. பார்க்கப்பட்ட நாள் 2015-07-17.