அச்சே தின் ஆனே வாலே ஹைன்

பாஜகவின் முழக்கம்

இந்திய அரசியலில், அச்சே தின் ஆனே வாலே ஹைன் (achhe din aane waale hain, பொருள்: நல்ல நாட்கள் வரும் ) என்பது 2014 இந்திய பொதுத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் இந்தி முழக்கமாகும். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்தியாவுக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது என்பதை உணர்த்தும் நோக்கத்தில், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியால் இந்த முழக்கம் உருவாக்கப்பட்டது.

முழக்கம்

தொகு

2014 இந்தியப் பொதுத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியால் "நல்ல நாட்கள் வருகின்றன" என்ற முழக்கம் உருவாக்கப்பட்டது.[1] மோடியின் கூற்றுப்படி, அவர் தனது முக்கிய எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்களில் ஒருவரும், அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் உரையிலிருந்து இந்த முழக்கத்திற்கான யோசனையை பெற்றார். [2] 8 சனவரி 2014 அன்று, வெளிநாடுவாழ் இந்தியர் நாளின் போது பார்வையாளர்களிடம் உரையாற்றிய சிங், "ஆம், நாங்கள் இப்போது மோசமான நாட்களை எதிர்கொள்கிறோம், ஆனால் நல்ல நாட்கள் விரைவில் வரும்" என்றார். அடுத்த நாள் அதே நிகழ்வில் தனது உரையின் போது, மோடி மன்மோகன் சிங்கைக் குறிப்பிட்டு இந்தியில் தனது கூற்றில் திரும்பத் திரும்பச் சொன்னார், அது அச்சே தின் ஆனே வாலே ஹைன் என்ற முழக்கமாக உருவானது.[2] இந்த முழக்கம் 2014 இந்திய பொதுத் தேர்தலுக்கான மோடியின் பரப்புரைக்கு முதன்மையாக பாஜகவால் பயன்படுத்தப்பட்டது.[3]

தேர்தலுக்கு பின்

தொகு

தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்பது தெளிவாகத் தெரிந்ததும், நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்தியா வென்றுவிட்டது! பாரத் கீ விஜய். அச்சேதின் ஆனே வாலே ஹேன். ["இந்தியாவிற்கு வெற்றி. நல்ல நாட்கள் வரப்போகிறது” என்றார். ]" [4] இந்த டிவீட் இந்தியாவின் அதிக மறுடிவீட் செய்யப்பட்ட டிவிட்டர் இடுகையாக மாறியது. [5] இந்த முழக்கத்தை உள்ளடக்கிய வெற்றிப் பாடலையும் பாஜக வெளியிட்டது. [6] பாஜகவின் வெற்றிக்கு இந்த முழக்கம் தீர்க்கமானதாக கருதப்பட்டது. [7] [8] ஆனால் புதிய அரசாங்கம் பொருளாதாரத்தை முடுக்கி, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் என்ற எதிர்பார்ப்புகளை ஊதிப் பெருக்கியதாகவும் இந்த முழக்கம் விமர்சிக்கப்பட்டுள்ளது. [9] தேர்தலுக்குப் பிறகு, மோடியின் அரசாங்கத்தின் கீழ் சிறந்த எதிர்காலம் குறித்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் அதே வேளையில், பல்வேறு நபர்களால் இந்த முழக்கம் அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. பிரித்தானிய அரசியல்வாதி ஜார்ஜ் ஆஸ்போர்ன் ஒரு வணிகக் குழுவுடன் இந்தியா வந்தபோது இந்த சொற்றொடரை பயன்படுத்தினார். [10]

13, நவம்பர, 2015 அன்று லண்டனில் உள்ள வெம்ப்பிளி விளையாட்டரங்களில் நடந்த நிகழ்வில் மோடியை அறிமுகப்படுத்தும் போது, பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரனால் இந்த முழக்கம் நகலெடுத்து பயன்படுத்தப்பட்டது. கேமரூன் கூட்டத்தில் கூறுகையில், "ஒரு சாய் வாலா மிகப்பெரிய ஜனநாயகத்தை ஒருபோதும் ஆள மாட்டார் என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால் இவர் அவற்றை தவறென நிரூபித்தார். அச்சே தின் ஆனே வாலே ஹைன் என்று சரியாகச் சொன்னார். ஆனால் இவரது ஆற்றலுடன், இவரது பார்வையுடன், இவரது லட்சியத்துடன். நான் மேலும் சென்று அச்சே தின் ஜரூர் ஆயேகா என்று கூறுவேன். ("நல்ல நாட்கள் கண்டிப்பாக வரும்"). [11]

மேற்கோள்கள்

தொகு
  1. "Will the budget really usher in 'acche din' for India?". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (HT Media). 16 July 2014 இம் மூலத்தில் இருந்து 16 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140716110656/http://www.hindustantimes.com/comment/indiapoliticswatch/will-the-budget-really-usher-in-acche-din-for-india/article1-1240870.aspx. 
  2. 2.0 2.1 "Manmohan Singh inspired BJP's campaign tagline 'Ache din aane waale hain', says Narendra Modi". Daily News and Analysis (Diligent Media Corporation). 30 April 2014. http://www.dnaindia.com/india/video-manmohan-singh-inspired-bjp-s-campaign-tagline-ache-din-aane-waale-hain-says-narendra-modi-1983560. 
  3. "The idea behind BJP's campaign song 'Ache Din Aane Wale Hain'". Zee News (Essel Group). July 2014. http://zeenews.india.com/videos/the-idea-behind-bjps-campaign-song-ache-din-aane-wale-hain_29901.html. 
  4. "India has won! Good days ahead: Modi". The Hindu. 16 May 2014. http://www.thehindu.com/news/national/india-has-won-good-days-ahead-modi/article6015902.ece. 
  5. "With a dubious legacy, India's 'accidental' premier bows out". Reuters. https://www.reuters.com/article/us-india-election-singh-idUSBREA4H02Z20140518. 
  6. "Election results: Modi shares self autographed picture with his mother". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 16 May 2014. http://timesofindia.indiatimes.com/news/Election-results-Modi-shares-self-autographed-picture-with-his-mother/articleshow/35206054.cms. 
  7. "To realise goals, Modi must become leader above politics". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 19 May 2014 இம் மூலத்தில் இருந்து 6 ஆகஸ்ட் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140806211038/http://www.hindustantimes.com/comment/analysis/to-realise-goals-modi-must-become-leader-above-politics/article1-1220915.aspx. 
  8. "BJP tells MPs to defend hard decisions of Modi govt". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 29 June 2014 இம் மூலத்தில் இருந்து 15 அக்டோபர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141015195426/http://www.hindustantimes.com/india-news/bjp-tells-mps-to-defend-hard-decisions-of-modi-govt/article1-1235013.aspx. 
  9. "PM's Burden Lies in Over-Selling "Acche Din"". என்டிடிவி. 27 June 2014. http://www.ndtv.com/article/opinion/pm-s-burden-lies-in-over-selling-acche-din-548898. 
  10. "Top UK Ministers Arrive, Voice Optimism About 'Achche Din'". 7 July 2014. http://www.outlookindia.com/news/article/Top-UK-Ministers-Arrive-Voice-Optimism-About-Achche-Din/848593. 
  11. "Cameron's Message To Modi's India: Acche Din Zaroor Aayega". HuffPost. 14 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சே_தின்_ஆனே_வாலே_ஹைன்&oldid=4109736" இலிருந்து மீள்விக்கப்பட்டது