அஜ்மீர் வல்லுறவு வழக்கு

1992 ஆம் ஆண்டில், "அஜ்மீர் தொடர் குழு பாலியல் வல்லுறவு மற்றும் மிரட்டுதல் வழக்கு (Ajmer Serial Gang Rape & Blackmailing Case) இந்தியாவின் கட்டாய பாலியல் வல்லுறவு வழக்குகளில் ஒன்றாகும்.[1] ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீரில் இந்த சம்பவங்கள் நடந்தன. இந்த பாலியல் வழக்குகளில் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள், சில கல்லூரி மாணவர்களாகவும் இன்னும் சிலர் பள்ளிகளில் பயில்பவராகவும் இருந்தனர். உள்ளூர் நாளிதழான நவ்ஜோதி சில நிர்வாணப் படங்களையும், உள்ளூர் பள்ளி மாணவர்களை மிரட்டுதல் செய்வதைப் பற்றிய செய்தியினையும் வெளியிட்ட பிறகு இந்த வல்லுறவு வழக்கு பரவலான கவனத்தினைப் பெற்றது .[2]

முக்கிய குற்றவாளியான பரூக் சிஷ்டி, அஜ்மீர் இந்திய இளைஞர் காங்கிரஸின் தலைவராக இருந்தவர் ஆவார். இவர் அஜ்மீர் ஷெர்ஃப் தர்காவின் காதிம்களைச் சேர்ந்தவர் என்பதால், அரசியல் அழுத்தம் ஏற்பட்டதால் காவல்துறையால் இந்த வழக்கின் விசாரணை நிறுத்தப்பட்டது.[3] இறுதியில், 18 தொடர் குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். எட்டு பேர் ஆயுள் தண்டனை பெற்றனர், அவர்களில் 4 பேர் 2001 இல் விடுவிக்கப்பட்டனர்.[4]

"குற்றம் சாட்டப்பட்டவர்கள் சமூக ரீதியாகவும், நிதி ரீதியாகவும் செல்வாக்குள்ள நிலையில் இருந்தனர். எனவே சிறுமிகள் தானாக முன்வந்து அவர்களுக்கு எதிராக சாட்சியம் அளிப்பது என்பதி சிக்கல் இருந்தது என்று ஓய்வு பெற்ற ராஜஸ்தான் காவல் துறை தலைமை இயக்குநர் ஒமேந்திர பரத்வாஜ் கூறினார், பின்னர் அவர் அஜ்மீர் துணை காவல் அதிகாரியாக இவர் நியமிக்கப்பட்டார்,[5]

சம்பவம்

தொகு

உள்ளூர் செல்வாக்குள்ள ஆண்களின் ஒரு குறிப்பிட்ட குழு இளம் பெண்களை குறிவைத்து தொடர் பாலியல் வல்லுறவு மற்றும் மிரட்டுதலில் ஈடுபட்டது. முதலில், ஃபாரூக் சிஸ்டி என்பவர் அஜ்மீரில் உள்ள சோபியா மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஒரு மாணவியின் புகைப்படத்தினை வைத்து மிரட்டியுள்ளார்.[6] பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் அந்த பெண்ணை அவரது வகுப்பு தோழர்கள் மற்றும் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யும்படி மிரட்டினார். இறுதியில், மற்ற சிறுமிகள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார்கள், மேலும் அவர்களை ஒரு பண்ணை வீட்டில் வைத்து ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளார்கள்.[6] பல உறை இது போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். பல சிறுமிகளை இவர்கள் பாலியல் வல்லுறவில் ஈடுபடச் செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் சொல்வதனை சமாதானம் செய்யும் நோக்கில் இந்த புகைப்படங்க எடுக்கப்பட்டுள்ளன.

விசாரணை

தொகு

நவஜோதியின் ஆசிரியர், தீன்பந்து சவுத்ரி,[7] இந்த வழக்கு பரவலாக கவனம் பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு இந்த வழக்கு பற்றி தெரியும் என்று ஒப்புக் கொண்டார், ஆனால் அவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகளின் தலையீட்டினால் இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறினார்.

கடைசியாக, குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேர் மீது போலீசார் முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்தனர். மேலதிக விசாரணைகளில் 18 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது மற்றும் பல நாட்கள் அந்த நகரத்தில் பதற்றம் நிலவியது.

மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர் , வகுப்புவாத பதற்றமும் அதிகரித்தது. மூன்று நாள் கடை அடைப்பில் ஈடுபட்டனர், பரவலான சுரண்டல் மற்றும் மிரட்டல் பற்றிய அடுத்தடுத்த செய்திகள் வரத் தொடங்கின. ஓய்வுபெற்ற ராஜஸ்தான் காவல் துறை தலைமை இயக்குநர் ஒமேந்திர பரத்வாஜ், அந்த நேரத்தில் அஜ்மீரில் காவல் துறை அதிகாரியாக இருந்தார், குற்றம்சாட்டப்பட்டவர்களின் சமூக மற்றும் நிதி பிரபுத்துவம் ஆகியன பாதிக்கப்பட்ட பல நபர்களை சாட்சியம் அளிக்க வரவிடாமல் அவர் தடுத்ததாக கூறினார்.

சான்றுகள்

தொகு
  1. IANS Date: 2012-01-04 Place: Jaipur (2012-01-04). "Accused in 1992 Ajmer sex scandal case arrested". Mid-day.com. பார்க்கப்பட்ட நாள் 2013-05-13.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  2. "Main accused in Ajmer sex scandal surrenders after 26 years". The Times of India (in ஆங்கிலம்). February 16, 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-06-12.
  3. December 26, VIJAY KRANTI; October 15, 2012 ISSUE DATE; July 30, 1992UPDATED; Ist, 2013 16:39. "Murder of Ajmer daily editor exposes sordid sex scandal involving criminals, politicians". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-02. {{cite web}}: |first4= has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
  4. "Almost three decades after a rape, blackmail case rocked Ajmer, surrender of an accused opens old wounds". The Indian Express (in ஆங்கிலம்). 2018-02-25. பார்க்கப்பட்ட நாள் 2020-06-12.
  5. . 25 February 2018. 
  6. 6.0 6.1 "एक-एक कर फार्महाउस पर बुलाया, 100 लड़कियों का रेप किया". LallanTop - News with most viral and Social Sharing Indian content on the web in Hindi (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-01-25.
  7. "Murder of Ajmer daily editor exposes sordid sex scandal involving criminals, politicians". India Today.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜ்மீர்_வல்லுறவு_வழக்கு&oldid=4161314" இலிருந்து மீள்விக்கப்பட்டது