அஞ்சனா தேவி சௌத்ரி

இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை

அஞ்சனா தேவி சௌத்ரி (Anjana Devi Chaudhary) இந்தியாவின் இராசத்தான் மாநிலம் சிகர் நகரத்தைச் சேர்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் எழுத்தாளர் ஆவார். சுதந்திரப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட இராசத்தான் மாநிலத்தைச் சேர்ந்த முதல் பெண் என்ற சிறப்புக்கு உரியவர். பிச்சோலியா விவசாயிகள் இயக்கத்திலும் இவர் ஈடுபட்டார், பிச்சோலியாவில் 500 பெண்கள் கொண்ட ஊர்வலத்தை வழிநடத்தினார். இதன் விளைவாக அவர் கைது செய்யப்பட்டு பூந்தி இராச்சியத்திலிருந்து நாடுகடத்தப்பட்டார். சமூக சீர்திருத்தவாதியும் காலனித்துவ எதிர்ப்பு தேசியவாதியுமான இராம் நாராயண் சவுத்ரி இவரது கணவராவார்.[1][2] இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் ஒரு தொண்டராகவும் ஆர்வலராகவும் அஞ்சனா தேவி இருந்தார்.

அஞ்சனா தேவி சௌத்ரி
Anjana Devi Chaudhary
பிறப்பு1857
சிறீ மாதோபூர், சிகர், இராசத்தான்
இறப்பு27 ஏப்ரல் 1981
தேசியம்இந்தியர்
பணிஇந்திய சுதந்திரப் போராளி, சமூக சீர்திருத்தவாதி
அறியப்படுவதுஇராசத்தான் மாநிலத்தில் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட முதல் பெண் செயற்பாட்டாளர்
வாழ்க்கைத்
துணை
இராம் நாராயண் சௌத்ரி

1921 ஆம் ஆண்டு முதல் 1924 ஆம் ஆண்டு வரை பெண்களின் அரசியல் விழிப்புணர்வை உயர்த்த இவர் முயன்றார். முதலில் அரசியல் மற்றும் தன்னார்வப் பணிகளைப் பற்றி தனது கணவர் இராம் நாராயண் சௌத்ரியிடம் கற்றுக்கொண்டார். 1930 ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதற்காக இவர் இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Anjanadevi Chaudhary". Shri Ram Narayan Chaudhary - Indian Freedom Fighter, Social Worker and AuthorShri Ram Narayan Chaudhary - Indian Freedom Fighter, Social Worker and Author (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-04-03.
  2. नागोरी, डॉ. एस.एल. "खण्ड 3", स्वतंत्रता सेनानी कोश (गाँधीयुगीन), 2011 (हिन्दी), भारतडिस्कवरी पुस्तकालय: गीतांजलि प्रकाशन, जयपुर, पृष्ठ सं 1।
  3. Bharatvarsh, TV9 (2022-06-12). "Azadi Ka Amrit Mahotsav : राजस्थान में 500 महिलाओं के साथ मिलकर अंग्रेजों से किसानों को छुड़ा लाईं थीं अंजना देवी". TV9 Bharatvarsh (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-04-03.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சனா_தேவி_சௌத்ரி&oldid=4087777" இலிருந்து மீள்விக்கப்பட்டது