அஞ்சறைப் பெட்டி

அஞ்சறைப் பெட்டி, தமிழகத்தில் சமயலறைகளில் காணப்படும் ஒரு பெட்டி. சமைக்கும் போது தேவையான கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம், மஞ்சள் போன்ற சில அத்தியாவசிய மளிகைப் பொருட்களை ஒரே இடத்தில் வைப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. கோயம்புத்தூர் வட்டாரமொழி வழக்கில் இது செலவுப் பெட்டி என அழைக்கப்படுகிறது.

பெயர்க் காரணம் தொகு

மரத்தால் செய்யப்பட்ட அஞ்சறைப் பெட்டியில் ஐந்து அறைகள் இருக்கும். அதனால் இது பொதுவாக அஞ்சறைப் பெட்டி எனப் பெயர் கொண்டுள்ளது. மர அஞ்சறைப் பெட்டி செவ்வக வடிவில் நான்கு சதுர உள்ளறைகளோடும் ஒரு நீள் சதுர வடிவ உள்ளறையோடும் அமைந்திருக்கும். அதன் மூடி இழுப்பு முறையில் திறக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும். மரத்தால் செய்யப்பட்ட அஞ்சறைப் பெட்டிகள் இப்போது அவ்வளாகப் பழக்கத்தில் இல்லை. அதற்கு பதில் உலோகத்தால் (எவர்சில்வர், அலுமினியம்) அல்லது நெகிழியாலான அஞ்சறைப் பெட்டிகள் பழக்கத்தில் உள்ளன. அவை வட்ட வடிவில் உள்ளன. இவை, ஒரு பெரிய வட்டப் பெட்டிக்குள் ஏழு சிறிய வட்டப் பெட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிய வண்ணம் வைக்கப்பட்டு வட்ட மூடியுடன் காணப்படுகின்றன.

காட்சியகம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சறைப்_பெட்டி&oldid=3092217" இலிருந்து மீள்விக்கப்பட்டது