அஞ்சல்லி அருவி
அஞ்சல்லி அருவி (Unchalli Falls) லூசிங்டன்அருவி என்றும் அழைக்கப்படும் இது அகனாக்சி ஆற்றில் 116 மீட்டர் (381 அடி) வீழ்ச்சியால் உருவாக்கப்பட்ட நீர்வீழ்ச்சி ஆகும். இந்தியாவின் கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டம் சித்தப்பூர் அருகே இந்த அருவி அமைந்துள்ளது. 1845 ஆம் ஆண்டில் இதனைக் கண்டுபிடித்த பிரித்தானிய அரசாங்கத்தின் மாவட்ட ஆட்சியர் ஜே.டி.லூஷிங்டன் நினைவாக இதற்கு லூசிங்டன் அருவி எனப் பெயரிடப்பட்டது.
அஞ்சல்லி அருவி | |
---|---|
அஞ்சல்லி அருவி | |
அமைவிடம் | சித்டாப்பூர், உத்தர கன்னட மாவட்டம், கருநாடகம், இந்தியா |
ஆள்கூறு | 14°24′34″N 74°44′51″E / 14.40944°N 74.74750°E |
மொத்த உயரம் | 116 மீட்டர்கள் (381 அடி) |
நீர்வழி | அகனாசினி ஆறு |
இந்த அருவி சில நேரங்களில் கெப்பா ஜோகா என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் அவை காதுக்கு கேளாத ஒலியை உருவாக்குகிறது.
அமைவிடம்
தொகுசித்தப்பூர் நகரம் அருவியிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் உள்ளது. ஹெகார்னே சுமார் (3.1 மைல்) தொலைவில் உள்ளது. ஆனால் பார்வையாளர்கள் அடர்ந்த காடு வழியாக மலையேற வேண்டும். [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Srinivas, Rao (2019-01-03). "Waterfalls in Karnataka". metrosaga. பார்க்கப்பட்ட நாள் 2019-01-03.