அஞ்சி வாழா அஞ்சி

அஞ்சி வாழாத அஞ்சி எழுத்தாளர் சக்கம்பட்டி தேவராஜ் என்பவரால் எழுதிய ஒரு வரலாற்று புதினம் ஆகும். தகடூர் நாட்டை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி பற்றிய புனைவு கலந்த வரலாற்று நாவல் ஆகும். தகடூர் நாட்டை ஆண்ட அஞ்சிக்கும், பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் இடையே ஏற்பட்ட பெரும் போரை மையமாக கொண்டாதாக இருப்பினும், ஔவைக்கு நெல்லிக்கனி ஈத்த அதியமான்[1] என்ற வரலாற்று நிகழ்வும் ஒரு முக்கிய பகுதியாக கூறப்பட்டுள்ளது.

கதைச்சுருக்கம்

தொகு

தமிழ்நாட்டின் மூப்பெரும் பேரரசுகளான சேர, சோழ, பாண்டியர்களின் வரிசையில் வைத்து போற்றப்படும் அதியர் மரபில் வந்த அதியமான் நெடுமான் அஞ்சியின் புகழைக் கண்டு கலக்கம் கொண்ட பெருஞ்சேரல் இரும்பொறை, மலையமான் திருமுடிக்காரியை அஞ்சிக்கு துணையாக நிற்கும் வல்வில் ஓரி[2] மீது ஏவி விடுகிறான். இப்போரில் தோற்ற வல்வில் ஓரி இயற்கை எய்துகிறான்.[3] ஓரியை வென்ற திருமுடிகாரி, அவனது நாடான கொல்லிமலையை[4] சேரனிடம் ஒப்படைத்து பொருள் பெறுகிறான். இதில் கோபம் கொண்டு, அஞ்சி காரியின் மீது படையெடுத்து காரியை வென்று, திருக்கோயிலூர்-ஐ அழிக்கிறான்.[5]


போரில் தோற்ற காரி, சேரனிடம் தஞ்சம் அடைகிறான். இதில், பெரும் கோபம் கொண்ட பெருஞ்சேரல் இரும்பொறை, காரி உட்பட எழு குறுநில மன்னர்களின் துணையோடு பெரும் படையை திரட்டி அஞ்சியின் மீது படையெடுத்து சென்று தகடூரை கைப்பற்றுகிறான்.[6] [7]

இவ்வராலாற்று நிகழ்வுகளுக்கு இடையே, ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த நிகழ்வு மற்றும் அஞ்சியின் காதல், ஓரிக்கும் அஞ்சிக்கும் இடையேயான நட்பு ஆகிய நிகழ்வுகள் அழகாகவும் வர்ணிக்கப்பட்டு நாவலுக்கு வலுவேற்றுகின்றன.

முக்கய கதை மாந்தர்கள்

தொகு
  1. சிறுபாணாற்றுப்படை
  2. "கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரிக்கு மணி மண்டபம்?". இந்து தமிழ் நாளிதழ். பார்க்கப்பட்ட நாள் 2021-03-22.
  3. நற்றிணை 320 இல் கபிலர் இயற்றிய பாடல்
  4. "வல்வில் ஓரி விழா: களையிழந்த கொல்லிமலை!". தினமணி நாளிதழ். பார்க்கப்பட்ட நாள் 2021-03-22.
  5. புறநானூறு 99-13
  6. பதிற்றுப்பத்து 78
  7. பதிற்றுப்பத்து, பதிகம் 8
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சி_வாழா_அஞ்சி&oldid=4106254" இலிருந்து மீள்விக்கப்பட்டது