அடால்ஃப் மேயர் (மனநல மருத்துவர்)
அடால்ஃப் மேயர் (Adolf Meyer) சுவிட்சர்லாந்தில் பிறந்தவர். இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் மனநல மருத்துவத் துறையில் கலங்கரை விளக்கமாய் விளக்கியவர். அமெரிக்க மனநல மருத்துவர் கூட்டமைப்பின் தலைவராய் உயர்ந்தவர்.[1][2][3]
அடால்ஃப் மேயர் | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 13, 1866 |
இறப்பு | மார்ச் 17, 1950 |
தேசியம் | சுவிட்சர்லாந்து |
துறை | மனநல மருத்துவம் |
ஆய்வு நெறியாளர் | Constantin von Monakow |
தாக்கம் செலுத்தியோர் | Auguste Forel, Constantin von Monakow |
இவர் மனநோய்களைப் புரிந்து கொள்வதில் அறிவியல் பூர்வமான அணுகுமுறையை வலியுறுத்தினார். நடத்தை மாறுபாடுகளுக்கு (behavioral abnormalities) தொற்றுக்கிருமிகள் காரணமாக இருக்கலாமோ எனும் வாதத்தை முன் வைத்தார்.
இவர் எந்தப் புத்தகமும் எழுதியதில்லை. ஆனாலும் இவர் எழுதிய கட்டுரைகள், இவரின் பண்புநலன்கள், இவரது மாணவர்கள் ஆகியவற்றின் மூலமாக இவர் புகழ் பெருகியது.
மேற்கோள்கள்
தொகு- "Meyer, Adolf". Encyclopedia Americana. 1920.
- ↑ Grob, Gerald (1985). The Inner World of American Psychiatry, 1890-1940. New Brunswick: Rutgers University Press. pp. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0813510811.
- ↑ Meyer, A (1922). The philosophy of occupation therapy. Archives of Occupational Therapy, 1, 1–10.
- ↑ Christiansen, C.H. (2007). "Adolf Meyer Revisited:Connections between Lifestyle, resilience and illness". Journal of Occupational Science 14 (2): 63–76. doi:10.1080/14427591.2007.9686586.