அடிப்படைக் கணக்கியல் சொற்கள்

அடிப்படைக் கணக்கியல் சொற்கள் தொகு

கணக்குப்பதிவியலில் பயன்படுத்தப்படும் அடிப்படை கணக்கியல் சொற்களை தெரிந்துகொள்வோம்.

முதல் தொகு

உரிமையாளரால் வணிகத்தில் முதலீடு செய்த தொகை முதல் எனப்படும்.

உரிமையாளர் தொகு

ஒரு நபர் வணிகத்திற்கு சொந்தக்காரராக இருந்தால் அவரை உரிமையாளர் என்றழைக்கலாம். இலாபத்தை ஈட்டும்வண்ணம் வணிகத்தில் முதலீடு செய்பவர் ஆவார்.

எடுப்புகள் தொகு

உரிமையாளர் தன் சொந்த உபயோகத்திற்கு ரொக்கம் மற்றும் சரக்கினை எடுத்துக்கொள்வது இது குறிக்கின்றது. இது முதல் தொகையில் கழிக்க வேண்டும்.

கொள்முதல் தொகு

மறு விற்பனை செய்யும் நோக்கத்திற்கும் அல்லது உற்பத்தி செய்வதற்கான சரக்கினை வாங்குவதை கொள்முதல் எனலாம்.

கொள்முதல் திருப்பம் அல்லது வெளித் திருப்பம் தொகு

கொள்முதல் செய்த சரக்கு தரக் குறைவாகவோ அல்லது கொள்முதல் நிபந்தனைக்கு மாறாக இருக்கும் நிலையில் சரக்கீந்தோருக்குத் திருப்பி அனுப்பப்படுகிறது. இதனைக் கொள்முதல் திருப்பம் என்றழைக்கப்படுகிறது.

விற்பனை தொகு

சரக்கு கொள்முதல் செய்த அதே நிலையிலோ அல்லது மாற்றம் செய்து தயாரிக்கப்பட்டோ விற்கப்படுவதை விற்பனை என்கிறோம்.

விற்பனைத் திருப்பம் அல்லது உள்திருப்பம் தொகு

வாடிக்கையாளரால் தரக்குறைவு உடையதாகவும் மற்றும் விற்பனை ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட நிபந்தனையில் இல்லாத நிலையிலும் உள்ள விற்பனை செய்த சரக்கு திரும்பப் பெறும்போது அதனை விற்பனைத் திருப்பம் அல்லது உள்திருப்பம் என்று அழைக்கலாம்.

சரக்கிருப்பு தொகு

சரக்கிருப்பு என்பது குறிப்பிட்ட தேதியில் விற்பனை ஆகாத சரக்கினைக் குறிக்கின்றது. இச்சரக்கிருப்பானது தொடக்க மற்றும் இறுதி சரக்கிருப்பாக இருக்கும்.

கடனாளிகள் தொகு

பணமோ அல்லது பணமதிப்போ உடனடியாகச் செலுத்தப்படாமல் குறிப்பிட்ட காலத்திற்குள் தருவதாக ஒப்புக்கொண்டு எந்த ஒரு பயனையும் ஒருவர் அல்லது நிறுவனம் பெற்றால் அவர் கடனாளி ஆகிறார். இருப்புநிலைக் குறிப்பில் கடனாளிகள் ஒரு சொத்தாகக் காட்டப்படுகிறது.

கடனீந்தோர் தொகு

எந்தவொரு பயனும் அடையாமல் எவரொருவர் நிறுவனத்திற்கு பணமோ, பொருளோ கொடுக்கிறாரோ அவர் கடனீந்தோர் ஆவார். கணக்கியலில் கடனீந்தோர் பொறுப்பாகக் கருதப்படுகிறார்.

சான்றுச் சீட்டு தொகு

ஒரு நடவடிக்கைக்கு ஆதாரமாக அமையும் எழுத்து வடிவிலான ஆவணமே சான்றுச் சீட்டு என அழைக்கப்படுகின்றது.

வெளி இணைப்புகள் தொகு

கணக்குப்பதிவியல் - தமிழ்நாடு பாடநூல் கழகம் பரணிடப்பட்டது 2018-04-02 at the வந்தவழி இயந்திரம்

Accounting