அடிமைத்தனமும் சமயமும்
அடிமைத்தனம் சமூகத்தின் ஒரு கொடுமையான கூறாக இருந்து வருகிறது. சமயம் சமூகதில் செல்வாக்கு மிக்க ஒரு அமைப்பு. சமய புனித நூல்கள் அடிமைத்தனத்தைப் பற்றி பல குறிப்புகள் உண்டு. அடிமைத்தனமும் சமயமும் கட்டுரை அடிமைத்தனம் தொடர்பாக சமயத்தின் கூற்றுகக்ளையும், அவை தொடர்பாக இன்றைய மதிப்பீட்டை பற்றியதாகும்.
கிறிஸ்தவம்
தொகுகிறிஸ்தவ சமயத்தில் அடிமைத்தனம் அனுமதிக்கப்பட்டது. யாரை எப்படி அடிமைப்படுத்தலாம் என்று பரிந்துரைகள் விவிலியத்தில் உள்ளது.
இந்து
தொகுஇந்து சமயத்தின் சாதி அமைப்பு அடிமைபின் படி ஆக கீழ் சாதிகள் அடிமைச் சாதிகளாக கருதப்படக்கூடியவை. குருமார்களுக்கும் அரசர்களுக்கும் கோயில்களுக்கும் சேவை செய்யும் தாசர்கள், தாசிகள் இருந்தார்கள். இந்திய சமூகத்தில் கொத்தடிமை வைத்திருக்கும் வழக்கம் நெடுங்காலமாக இருக்கிறது.
இஸ்லாம்
தொகுமுதன்மைக் கட்டுரை: இஸ்லாமில் அடிமைத்தனம்
இசுலாம் சமயத்தின் முக்கிய நீதி அமைப்புகள் அடிமைத்தனத்தை முற்காலத்தில் ஏற்றுக்கொண்டன.[1] முகமதுவும் அவரோடு உடனிருந்தவர்களும் அடிமைகளை வாங்கி விற்றனர். சிலரை விடுதலையும் செய்தனர்.[1] 19 நூற்றாண்டின் இறுதியில் இஸ்லாமிய சிந்தனை அடிமைத்தனம் இஸ்லாமிற்கு உடன்படாத செயற்பாடு என திரும்பியது. சவூதி அரேபியாவின் en:Wahhabi இதை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.
21ஆம் நூற்றாண்டில் அடிமை முறையை ஒழிப்பதற்கு சமயங்கள் தூண்டுதல் அளித்தல்
தொகுஉலகத்தில் நிலவுகின்ற பலவகையான அடிமை முறைகளை அழித்தொழிப்பதற்கு நாடுகள், சமயங்கள், சமூகக் குழுக்கள் முன்வர வேண்டும் என்று சமயத் தலைவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். வத்திக்கான் நகரில் கத்தோலிக்க கிறித்தவம், கீழை மரபுவழி கிறித்தவம், ஆங்கிலிக்கம் ஆகிய கிறித்தவ திருச்சபைகளின் தலைவர்களும், இசுலாம் சமயத் தலைவர்களும், யூதம், இந்து சமயம், பவுத்தம் போன்ற உலக சமயங்களின் தலைவர்களும் ஒன்றுகூடி வந்து 2014, திசம்பர் 2ஆம் நாள் “அடிமை முறை ஒழிப்பை ஆதரிக்கும் அறிக்கை” ஒன்றில் கையெழுத்திட்டனர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Lewis 1994, Ch.1
- ↑ அடிமை முறை ஒழிப்புக்கு சமயங்களின் ஆதரவு