அடிலாக்சு
சதுப்பு நில கீரி, அடிலாக்சு பாலுடைனோசசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
அடிலாக்சு
சிற்றினம்
  • அடிலாக்சு பாலுடைனோசசு
  • †'அடிலாக்சு மீசோடெசு

அடிலாக்சு (Atilax) என்பது சதுப்பு நிலக் கீரி (அடிலாக்சு பாலுடினோசசு) என்ற ஒற்றை உயிருள்ள சிற்றினத்தைக் கொண்ட கீரி பேரினமாகும். சதுப்பு நிலக் கீரியின் மூதாதையர்களாக இருக்கக்கூடிய ஒரே ஒரு புதைபடிவச் சிற்றினமும் தென்னாப்பிரிக்காவில் அறியப்படுகிறது.

அடிலாக்சு என்ற பேரினப் பெயர் 1826ஆம் ஆண்டில் பிரெடெரிக் குவியர் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

அடிலாக்சு சிற்றினங்கள் தனிமையில் வாழ்பவை. இது இரவாடுதல் வகையினைச் சார்ந்த பகுதி நீர்வாழ் பாலூட்டிகளாகும். இவை ஈரநிலங்களில் வாழ்கின்றன. மீன், ஓட்டுமீன்கள், தவளைகள் மற்றும் சிறிய பாலூட்டிகளை உணவாகக் கொள்கின்றன.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிலாக்சு&oldid=4081360" இலிருந்து மீள்விக்கப்பட்டது