அடி மண்

அடி மண் (Subsoil) என்பது தரையின் மேர்பரப்பில் இருக்கும் மேல் மண்ணிற்குக் கீழாக நிலத்தடியில் உள்ள மண்ணாகும்.மேல் மண்ணைப் போலவே இதுவும் மணல், வண்டல் மற்றும் களிமண் போன்றவற்றின் சிறிய துகள்கள் சேர்ந்து அடி மண்னையும் உருவாக்குகின்றன. ஆனால் அடி மண்ணில் மேல் மண்ணில் உள்ள உயிர்ம பருப்பொருள்களையும் மற்றும் மட்கு உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கவில்லை.

அடிமண் அடுக்கு

நிலத்தடி மண்ணுக்குக் கீழேயிருப்பது கீழடுக்காகும். எஞ்சிய படுகைப் பாறை படிவுகள் அல்லது காற்றுவீச்சுப் படிவுகள் போன்றவை ஒன்றன்கீழ் ஒன்றாக படிந்துள்ளன. படிவத்தின் கீழ் உள்ள மற்றொரு படிவம், உள்ளது. அடர் மட்குகள் குறைவாக இருப்பதால் அடிமண்ணின் நிறம் மேல் மண்ணைக் காட்டிலும் வெளிர் நிறத்தில் காணப்படுகின்றன. இங்கு மரங்கள் போன்ற சில தாவரங்களின் ஆழமான வேர்கள் காணப்படலாம். ஆனால் பெரும்பாலான தாவரங்களின் வேர்கள் மேல் மண்ணின் மேற்பரப்பிற்குள்ளேயே உள்ளன.

களிமண் சார்ந்த அடிமண்ணே உலர்மண் கல், திமித்த மண்சுவர், போன்ற பல புவி கட்டுமானங்களுக்கு ஆதார மூலமாக உள்ளது.

சான்றுகள்தொகு

புற இணைப்புகள்தொகு

  • Topsoil and Subsoil
  • Wossac அனைத்துலக மண்ணைப் பற்றிய தகவல் இணையம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடி_மண்&oldid=2266779" இருந்து மீள்விக்கப்பட்டது