அடுக்குத் தொடர்
செய்யுளிலும் வழக்கிலும் அசைநிலைக்கும், விரைவு வெகுளி (ஆத்திரம்) உவகை அச்சம் அவலம் ஆகிய பொருள் நிலைகளை உணர்த்தும் வண்ணமும், யாப்பிலக்கணத்தின்படி அல்லது பொதுவாக இசையை நிறைவு செய்யும் பொருட்டும் ஒரு சொல் இரண்டு, மூன்று, அல்லது நான்கு முறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் எனப்படும்.[1]
எடுத்துக்காட்டுகள்
தொகுகரணியம் | எடுத்துக்காட்டுகள் |
---|---|
அசைநிலை | அன்றே அன்றே |
விரைவுப்பொருள் | போ போ போ |
வெகுளி | விடு விடு விடு |
உவகை | வாருங்கள் வாருங்கள் |
அச்சம் | தீத்தீத்தீ |
அவலம் | வீழ்ந்தேன் வீழ்ந்தேன் வீழ்ந்தேன் |
இசைநிறை | வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே![2] |
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ பவணந்திமுனிவர் (2007). நன்னூல் - புதிய அணுகுமுறையில். சென்னை: சாரதா பதிப்பகம். pp. 301–302.
அசைநிலை பொருள்நிலை இசைநிறைக்கு ஒரு சொல் இரண்டு மூன்று நான்கு எல்லைமுறை அடுக்கும்
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ "தமிழ்த்தாய் வாழ்த்து". தமிழ்நாடு அரசு. Retrieved 2008-08-23.
{{cite web}}
:|first=
missing|last=
(help)