அடைவு (கணினியியல்)

கணினியியலில் அடைவு (folder, directory) என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புக்களையும், பிற அடைவுகளைக் கொண்ட கொள்கலன் ஆகும். பெரும்பாலான கணினிகளில் அனைத்து தகவல்களும் கோப்புக்களும் அவற்றைக் கொண்ட அடைவுகளாகவுமே ஒழுங்குபடுத்தப் படுகின்றன. பொதுவாக அடைவுகளும், கோப்புக்களும் அடிவேரில் இருந்து விரியும் மரம் போல, ஒரு மூல அடைவில் இருந்து பல கிளை அடைவுகளாக ஒழுங்குபடுத்தப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடைவு_(கணினியியல்)&oldid=2266852" இருந்து மீள்விக்கப்பட்டது