அட்டநாக பந்தம்
அட்டநாக பந்தம் என்பது ஓவியப்பா வகைகளில் ஒன்று. எட்டு நாகப்பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருப்பது போலப் படம் வரையப்படும். பாடல் (கவிதை) ஒன்று அந்தப் பிணைப்பினூடே நுழைந்து படிக்கும்போது பாடல் பொருந்தி வருமாறு ஓவியப்பா அமைந்திருக்கும்[1]. பாடலைப் பாம்பின் தலையில் தொடங்கி வால் வரையில் சென்று படித்துக்கொள்ள வேண்டும்.
சொல்வளம் மிக்கவர் இதனைப் பாடுவர். ஓவியப் பாவைச் சித்திரக்கவி என்பர்.
ஔவை சண்முகம் பற்றி திருவையாறு அப்துல்கபூர் சாயபு இருபதாம் நூற்றாண்டில் பாடிய சித்திரக்கவி நூல் ஒன்று உண்டு.[2] சொல்லணிப் பாடல்களில் நாட்டம் கொண்ட தமிழழகன் பாடிய பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.
- தமிழழகன் கவிதை
- பாரதிக் கெல்லை
- பாருக்குளே இல்லை
இதனைப் பாடுவதற்கு இவர் கூறும் எளிய வழி
- 15 எழுத்தில் ஈரடிக் கவிதை அமையவேண்டும்
- 4ஆவது எழுத்தும், 10ஆவது எழுத்தும் ஒரே எழுத்தாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதனைப் பொருத்திப் பார்த்து அறிந்துகொள்க
- நாரணனை நாடு
- பூரணனைக் கொண்டாடு
மாம்பழக் கவிச்சிங்க நாவலர், அட்டநாக பந்தம், சதுரங்க பந்தம் முதலியவற்றிற்கு இலக்கணம் வகுத்துள்ளார்[3]
அடிக்குறிப்பு
தொகு- ↑ "கவிராயர்!". தினமலர். 13 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 12 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ செங்கைப் பொதுவன் பாதுகாப்பிலிருந்து தொலைந்துவிட்டது
- ↑ "4.2 சிற்றிலக்கியங்களும் பல்துறை நூல்களும்". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 12 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)