அட்டமா சித்திகள்
அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர்.
அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும், அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சியினால் பெற்றனர். இந்தச் சித்திகளைத் திருமந்திரம் விளக்குகிறது.[1][2]
அட்டமா சித்திகள்
தொகு“ |
|
” |
திருமூலர்--திருமந்திரம்-668வது பாடல் [3]
அட்டமா சித்திகள் விளக்கம்
தொகு- அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
- மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.
- இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
- கரிமா - கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
- பிராத்தி - எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
- பிராகாமியம் - தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
- ஈசத்துவம் - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
- வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்.[3]
விளக்கம் தரும் பாடல் பொருள் நோக்குப் பிரிப்பு
தொகுஅணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம், அவற்றின்
- அதி வேகத்து இயங்கியும் தோய்வற்ற உடல் லகிமா,
திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை பகிமா,
- சிந்தித்த பலம் எவையும் செறிந்துறுகை பிராத்தி,
பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகை
- பிரகாமி, ஈசிதை மாவலியும் அடி பேணி
மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகை
- வசி வசிதை வலியாரால் தடுப்பரிய வாழ்வே.[4]
உசாத்துணை
தொகு- பூலோகசிங்கம், பொ., இந்துக் கலைக்களஞ்சியம், கொழும்பு, 1990
- துரை இராஜாராம், திருமூலர் வாழ்வும் வாக்கும், நர்மதா பதிப்பகம்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005
மேற்கோள்கள்
தொகு- ↑ திருமந்திரம் 640-711
- ↑ இவற்றில் 20,800 பேதம் கொண்ட கன்ம மாமந்த யோகம், கீழேழ் மேலேழ் புவி, கால் என்னும் காற்று 513, முதலான எண்ணுத்தொகைப் புதிர்கள் உள்ளன.
- ↑ 3.0 3.1 சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்- எஸ். சூரியமூர்த்திநர்மதா பதிப்பகம்-சென்னை-17.
- ↑ நூல் – சிவதருமோத்தரம், சிவஞானயோகவியல், 90 சிவதருமோத்தர உரை மேற்கோள், 16 ஆம் நூற்றாண்டுப் பாடல்.