அட்டானு தாசு

அட்டானு தாசு (Atanu Das) 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் நாள் பிறந்த ஓர் இந்திய வில்லாளர் ஆவார்[1]. ஆண்களுக்கான தனிநபர் மற்றும் அணிப்பிரிவுகளில் கூட்டுவில் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பங்கேற்று வருகிறார். 2008 ஆம் ஆண்டு முதல்[2] அனைத்துலக வில்வித்தைப் போட்டிகளில் பங்கேற்று வரும் அட்டானு தாசு, உலகத் தரவரிசையில் தற்பொழுது 22 ஆவது இடத்தைப் பிடித்து தொடர்ந்து விளையாடி வருகிறார்[3].

2013 ஆம் ஆண்டு கொலம்பியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் அட்டானு தாசு, தீபிகா குமாரியுடன் இணைந்து போட்டியிட்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார். கொல்கத்தாவிலுள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் தற்பொழுது இவர் பணிபுரிந்து வருகிறார்.

வில்வித்தைப் போட்டியில் திறமையுள்ள நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் இந்தியரான அட்டானுதாசு தன்னுடைய 14 ஆவது வயதில் பயிற்சியாளர் மித்து தாவிடம் பயிற்சி பெற்றுவந்தார். பின்னர் 2008 ஆம் ஆண்டில் டாட்டா வில்வித்தைக் கழகத்திற்குச் சென்று கொரியப் பயிறேசியாளர் இலிம் சாயெ வோங்கிடம் பயிற்சி பெற்றார்.

பிற சாதனைகள் தொகு

  • வெள்ளிப்பதக்கம், கூட்டுவில் ஆண்கள் தனிச்சுற்று, தேசிய முதுநிலை வில்வித்தை சாம்பியன் போட்டி,2014 [4]
  •   கூட்டுவில் ஆண்கள் குழுப்போட்டி, கிராண்ட் பிரிக்சு ஆசிய வில்வித்தைப் போட்டி, தாய்லாந்து, 2013. இராகுல் பானர்ஜி மற்றும் பினோத் சுவான்சி உடன்[5]
  •   கூட்டுவில் கலப்பு இரட்டையர் போட்டி, கிராண்ட் பிரிக்சு ஆசிய வில்வித்தைப் போட்டி, தாய்லாந்து, 2013 ( பாம்பேலா தேவி இலைசுராம் உடன்.) [5]
  •   கூட்டுவில் ஆண்கள் தனிச்சுற்று, கிராண்ட் பிரிக்சு ஆசிய வில்வித்தைப் போட்டி, தாய்லாந்து,[5]
  • தங்கப்பதக்கம் - கூட்டுவில் கலப்பு இரட்டையர் குழுப்போட்டி, 3-வது கிராண்ட் பிரிக்சு ஆசிய வில்வித்தைப் போட்டி, டாக்கா, பங்களாதேசு 2011 (இரிமில் பியுரியுலை) உடன்.[6]
  •  , கூட்டுவில் ஆண்கள் குழுப்போட்டி, 3-வது கிராண்ட் பிரிக்சு ஆசிய வில்வித்தைப் போட்டி, டாக்கா, பங்களாதேசு 2011[6]
  • தங்கப்பதக்கம் - கூட்டுவில் ஆண்கள் தனிச்சுற்று, 3-வது கிராண்ட் பிரிக்சு ஆசிய வில்வித்தைப் போட்டி, டாக்கா, பங்களாதேசு 2011[6][7]
  • தங்கப் பதக்கம் - கூட்டுவில் ஆண்கள் குழுப்போட்டி , 34 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள், ஜாம்செட்பூர், இந்தியா 2011[8]
  •   கூட்டுவில் ஆண்கள் குழுப்போட்டி, 31 ஆவது சகாரா தேசிய முதுநிலை வில்வித்தை சாம்பியன் போட்டிகள், விசயவாடா, இந்தியா, 2011
  • வெள்ளிப் பதக்கம்- கூட்டுவில் சிறுவர் குழுப்போட்டி , இளையோர் உலகச் சாம்பியன் போட்டி, போலந்து 2011[6]
  • தங்கப் பதக்கம் - கூட்டுவில் சிறுவர் குழுப்போட்டி, 33வது தேசிய இளநிலை வில்வித்தை சாம்பியன் போட்டிகள், புது தில்லி, இந்தியா, 2010

மேற்கோள்கள் தொகு

  1. "World Archery - Atanu Das". World Archery Federation. பார்க்கப்பட்ட நாள் 3 November 2015.
  2. "Atanu Das". World Archery. பார்க்கப்பட்ட நாள் 2015-11-03.
  3. "World Ranking | World Archery". World Archery. பார்க்கப்பட்ட நாள் 2015-11-26.
  4. "National archery: Maiden title for Dindor" (in en). The Hindu. 2014-10-19. http://www.thehindu.com/sport/other-sports/national-archery-maiden-title-for-dindor/article6517143.ece. 
  5. 5.0 5.1 5.2 Minded, Sports. "The Southeast Asian Games - News: 1st Asian Archery Grand Prix (World Ranking Tournament)". பார்க்கப்பட்ட நாள் 2015-11-26.
  6. 6.0 6.1 6.2 6.3 "Indian Archery". www.indianarchery.info. பார்க்கப்பட்ட நாள் 2015-11-03.
  7. "International Achievements : Archery Association of India". www.indianarchery.info. பார்க்கப்பட்ட நாள் 2015-11-26.
  8. "Indian Archery". www.indianarchery.info. பார்க்கப்பட்ட நாள் 2015-11-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டானு_தாசு&oldid=3258749" இலிருந்து மீள்விக்கப்பட்டது