பாம்பேலா தேவி இலைசுராம்
பாம்பேலா தேவி இலைசுராம் (Bombayla Devi Laishram) ஓர் இந்திய வில்லாளர் ஆவார். மணிப்பூர் மாநிலம், கிழக்கு இம்பாலில்[1] பிறந்த இவர், 1997[2] ஆம் ஆண்டு முதல் தேசியப் போட்டிகளிலும், 2007 ஆம் ஆண்டு முதல் அனைத்துலகப் போட்டிகளிலும் இந்தியாவின் சார்பாக பங்கேற்று வருகிறார்.
2012 இல் லைஷ்ரம் | |
தனித் தகவல்கள் | |
---|---|
விளிப்பெயர்(கள்) | Bom |
தேசியம் | இந்தியன் |
பிறந்த நாள் | 22 பெப்ரவரி 1985 |
பிறந்த இடம் | இம்பால் கிழக்கு, மணிப்பூர் |
வசிப்பிடம் | இம்பால், மணிப்பூர் |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | வில்வித்தை |
இளம்பருவம்
தொகுஇலைசுராம் 22 February 1985 பிப்ரவரி 22 இல் மணிப்பூரில் பிறந்தார்.[1] இவரதுதாய் உள்ளூர் வில்வித்தைப் பயிற்சியாளரான எம். யாமினி தேவி. தந்தையார் மங்களம் சிங். இவர் மணிப்பூர் கைப்பந்து குழுவின் மாநிலப் பயிற்சியாளர் ஆவார்.[3] இவர் வில்வித்தையைத் தன் 11 ஆம் அகவையிலேயே பயிலத் தொடங்கி, பிறகு இந்திய விளையாட்டு ஆணையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.[4] இவர் தன் நேர்முகப் பேட்டியொன்றில் தனது குடும்ப விளையாட்டு மரபைப் பின்பற்றியே வில்வித்தையைத் தேர்வு செய்ததாகக் கூறியுள்ளார்.[5] இவர் இப்போது மணிப்பூரில் உள்ள இம்பாலில் வாழ்ந்து வருகிறார்.[6]
வாழ்க்கைப் பணி
தொகுபெய்சிங் நகரில் நடைபெற்ற 2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பெண்கள் தனிப்பிரிவிலும், பெண்கள் அணிப்பிரிவிலும் இலைசுராம் பங்கேற்றார். இலைசுராம் , தோலா பாணர்சி மற்றும் பிரணித்தா வர்தினேனி ஆகியோர் இணைந்த பெண்கள் அணி பெண்களுக்கான தகுதிச்சுற்றுப் போட்டியில் ஆறாவது இடத்தைப் பிடித்தது. 16 ஆவது சுற்றில் கிடைத்த நேரடி வாய்ப்பு மூலம் காலிறுதிப் போட்டிக்குள் நுழைந்த இவ்வணி சீனாவிடம் 206-211 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தது. தனிநபர் பிரிவில் தகுதிச்சுற்றின் போது 22 ஆம் இடத்தில் இருந்த இலைசுராம், 64 ஆவது சுற்றில் போலந்தின் மார்சிங்கிவிக்சிடம் 101-103 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தார்[7]
2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் தனிநபர் பிரிவின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் மெக்சிகோவின் ஐடா உரோமனிடம் 2-6 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியுற்று வெளியேற்றப்பட்டார்[8]. அணிப்பிரிவு ஆட்டத்தில் இவர் இடம்பெற்றிருந்த இந்திய அணி டென்மார்க்கிடம் முதல் சுற்றிலேயே 211-210 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது[9]
2016 இரியோ ஒலிம்பிக் போட்டிகளிலும் விளையாட இவர் இடம்பெற்றுள்ள அணி இந்தியாவின் சார்பாக பங்கேற்றது. பாம்பேலா தேவி இலைசுராம், தீபிகா குமாரி மற்றும் இலட்சுமிராணி மாய்கி ஆகியோர் அடங்கிய இவ்வணி தகுதிச்சுற்றுப் போட்டியில் ஏழாவது இடத்தைப் பிடித்தது[10]. முன்னதாக கொலம்பியாவுடன் விளையாடி வெற்றியை ஈட்டிய இவர்கள் காலிறுதிப் போட்டியில் உருசியாவிடம் ஆட்டத்தை இழந்தனர்[11].
ஆசுட்ரியாவின் இலாரன்சு பால்டௌஃப்புடன் பெண்கள் தனிநபர் பிரிவில் போட்டியிட்ட இலைசுராம் 6-2 என்ற கணக்கில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். சீன தைபேவைச் சேர்ந்த லின் சிகிச்சியாவுடன் மோதிய அடுத்த சுற்றுப் போட்டியிலும் 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று மேலும் ஒரு சுற்றுக்கு முன்னேறினார்[12]. முதல் எட்டு இடங்களில் ஒன்றைப் பிடிப்பதற்கான அடுத்த சுற்றுப் போட்டியில், மெக்சிகோவின் அலேயாண்ட்ரா வேலன்சியாவிடம் 2-6 என்ற புள்ளிகள் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்[13].
விருது
தொகுஅருச்சுனா விருது - 2012[14]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Bombayla Devi Laishram – Archery – Olympic Athlete". 2012 London Olympic and Paralympic Summer Games. International Olympic Committee. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 4 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Bombayla Laishram Devi". World Archery Federation. பார்க்கப்பட்ட நாள் 7 August 2016.
- ↑ "Bombayla Devi Profile: Archery". இந்தியன் எக்சுபிரசு. 1 August 2016. பார்க்கப்பட்ட நாள் 17 August 2016.
- ↑ "All you need to know about Manipur's Bombayla Devi, Olympian archer". The Northeast Today. Archived from the original on 25 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 17 August 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "7 Takeaways: Rio 2016 Individual Elimination Day 3". World Archery Federation. 10 August 2016. பார்க்கப்பட்ட நாள் 17 August 2016.
- ↑ "Bombayla Laishram Devi". World Archery Federation. பார்க்கப்பட்ட நாள் 17 August 2016.
- ↑ "Athlete biography: Laishram Bombayla Devi". Archived from the original on 2008-08-13. பார்க்கப்பட்ட நாள் 2016-08-17., beijing2008.cn, ret: 23 August 2008
- ↑ "Bombayla bows out in pre-quarters". The Hindu (Chennai, India). 30 July 2012. http://www.thehindu.com/sport/other-sports/article3703365.ece.
- ↑ "team (FITA Olympic round - 70m) women results - Archery - London 2012 Olympics". www.olympic.org. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
- ↑ "2016 Rio Olympics: Indian men's archery team faces last chance to make cut". Zee News. 11 June 2016. http://zeenews.india.com/sports/2016-rio-olympics-indian-mens-archery-team-faces-last-chance-to-make-cut_1894321.html. பார்த்த நாள்: 8 August 2016.
- ↑ "India women’s archery team of Deepika Kumari, Laxmirani Majhi, Bombayla Devi lose quarter-final against Russia". Indian Express. http://indianexpress.com/sports/rio-2016-olympics/india-womens-archery-team-of-deepika-kumari-laxmirani-majhi-bombayla-devi-lose-quarter-final-against-russia-day-2-2960351/. பார்த்த நாள்: 8 August 2016.
- ↑ "Rio 2016 - Archers and boxer Manoj Kumar dazzle, while Jitu Rai falters". 10 August 2016.
- ↑ "Bombayla Devi, Deepika Kumari bow out of Rio 2016 Olympics". The Indian Express. 11 August 2016. http://indianexpress.com/sports/rio-2016-olympics/bombayla-devi-deepika-kumari-bow-out-of-india-archery-day-6-2968789/. பார்த்த நாள்: 12 August 2016.
- ↑ "Sports ministry announces 25 Arjuna awards for this year". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 20 August 2012. பார்க்கப்பட்ட நாள் 17 August 2016.