இலட்சுமிராணி மாய்கி

இந்திய வில்லாளி

இலட்சுமிராணி மாய்கி (Laxmirani Majhi) ஓர் இந்திய வில்லாளர் ஆவார். சார்க்கண்ட் மாநிலம், காட்சிலாவில் உள்ள பாகுலாவில் 1989 ஆம் ஆண்டு சனவரி 26 இல் பிறந்தார். மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள ஆசன்சோல் என்ற வணிகப்பெருநகரின் துணை நகர் சித்தரஞ்சனில் இருந்து கூட்டுவில் பிரிவில் வலதுகை வில்லாளியாக பங்கேற்று வருகிறார்.

இலட்சுமிராணி மாய்கி
Laxmirani Majhi
தனிநபர் தகவல்
பிறப்பு26 சனவரி 1989 (1989-01-26) (அகவை 35)
பாகுலா, காட்சிலா, சார்க்கண்ட்
வசிப்பிடம்சித்தரஞ்சன், ஆசன்சோல், மேற்கு வங்காளம்
உயரம்1.61 m (5 அடி 3 அங்)
எடை55 kg (121 lb)
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுவில்வித்தை
நிகழ்வு(கள்)கூட்டுவில்

இளம்பருவம்

தொகு

சந்தால் பழங்குடியைச் சேர்ந்த இலட்சுமி சார்க்கண்ட்டின் கிழக்கு சிங்பூம் மாவட்டத்திலுள்ள பாகுலா கிராமத்தில் பிறந்து வளர்ந்தார். வில்வித்தைக் கழகத் தேர்வாளர்கள் இவர் படித்த அரசுப்பள்ளியைப் பார்வையிட வருகை தந்தபோது இலட்சுமியைக் கண்டறிந்து முதல் வாய்ப்பை வழங்கினர்[1]. சத்தீசுகர் மாநிலத்தின் பிலாசுப்பூர் நகரம் இந்தியத் தொடருந்துத் துறையில் பணிபுரிந்து வருகிறார்[2].

சாதனைகள்

தொகு

2015 ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டின் கோபனேகன் நகரில் நடைபெற்ற உலக வில்வித்தைப் போட்டியில்[3] பெண்கள் தனிப்பிரிவில் போட்டியிட்ட இலட்சுமி வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

2016 இரியோ ஒலிம்பிக் போட்டிகளிலும் விளையாட இவர் இடம்பெற்றுள்ள அணி இந்தியாவின் சார்பாக பங்கேற்றது[4]. இலட்சுமிராணி மாய்கி, பாம்பேலா தேவி இலைசுராம் மற்றும் தீபிகா குமாரி ஆகியோர் அடங்கிய இவ்வணி தகுதிச்சுற்றுப் போட்டியில் ஏழாவது இடத்தைப் பிடித்தது. முன்னதாக கொலம்பியாவுடன் விளையாடி வெற்றியை ஈட்டிய இவர்கள் காலிறுதிப் போட்டியில் உருசியாவிடம் ஆட்டத்தை இழந்தனர்[5].

தனிநபர் பிரிவில் தகுதிச்சுற்றில் 43 ஆவது இடம்பிடித்திருந்த இலட்சுமி பின்னர் சுலோவோகியா நாட்டின் அலெக்சாந்திரா உலோங்கோவாவிடம் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்[6].

மேற்கோள்கள்

தொகு
  1. "Laxmirani Majhi, Archer - UNICEF". Archived from the original on 2021-03-08. பார்க்கப்பட்ட நாள் 2016-08-18.
  2. "Shooting Olympics arrow". Archived from the original on 2016-08-14. பார்க்கப்பட்ட நாள் 2016-08-18.
  3. "2015 World Archery Championships: Entries by country" (PDF). ianseo.net. pp. 7–18. பார்க்கப்பட்ட நாள் 26 August 2015.
  4. "2016 Rio Olympics: Indian men's archery team faces last chance to make cut". Zee News. 11 June 2016 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225032456/http://zeenews.india.com/sports/2016-rio-olympics-indian-mens-archery-team-faces-last-chance-to-make-cut_1894321.html. பார்த்த நாள்: 8 August 2016. 
  5. "India women’s archery team of Deepika Kumari, Laxmirani Majhi, Bombayla Devi lose quarter-final against Russia". Indian Express. http://indianexpress.com/sports/rio-2016-olympics/india-womens-archery-team-of-deepika-kumari-laxmirani-majhi-bombayla-devi-lose-quarter-final-against-russia-day-2-2960351/. பார்த்த நாள்: 8 August 2016. 
  6. "Rio Olympics 2016: Laxmirani Majhi crashes out of women's individual archery event". First Post. 8 August 2016. http://www.firstpost.com/sports/rio-olympics-2016-laxmirani-majhi-crashes-out-of-womens-individual-archery-event-2943218.html. பார்த்த நாள்: 9 August 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமிராணி_மாய்கி&oldid=3544516" இலிருந்து மீள்விக்கப்பட்டது