அணியக்கூடிய கருவி

(அணிவகை கணினி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அணியக்கூடிய கருவி அல்லது அணியக்கூடிய கணினி என்பது உடலில் ஆடை அணிகலன்கள் போல் உடுத்திக் கொள்ளத்தக்க கருவி அல்லது கள் ஆகும். இவ்வகைக் கணினிகள் ஒருவருடைய உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும், உடனுக்குடன் தேவைப்படும் தகவல்களை இணையவழிப் பெறவும், ஐம்புல உணர்வுகளை விரிவு படுத்தவும் என பற்பல பயன்பாடுகளுக்குப் பயன்படும் என்று தொழில்நுட்ப அறிஞர்கள் கருதுகிறார்கள். ஒருவருடைய புலன் உறுப்புகள் சூழலில் பதிந்து இருக்கும் பொழுது, தேவைப்படும் கூடிய கணிக்கும் திறன் உள்ள சூழ்நிலைகளின் இவ்வகை உடுப்புக் கணினிகள் பயன்படும் என நினைக்கின்றனர். பொதுவாக ஐம்புல உணர்வுகளை மேம்படுத்தும் (பல வழிகளின் வலுப்படுத்தும்) ஒரு கருவியாக உடுப்புக்கணிகள் கருதப்படுகின்றன.[1][2][3]

எம்.ஐ.டி யில் படித்து, பின்னர் டொரான்ட்டோ பல்ககைக் கழகத்தில் பேராசிரியராக பணி புரியும் ஸ்டீவ் மன் (Steven Mann) என்பவர் பல்வேறு கால நிலைகளில் உடுப்புக் கணினி அணிந்து இருக்கும் காட்சி
அணி கணினிக்கு ஓர் எடுத்துக்காட்டு. பலர் பங்குகொள்ளும் நிகழ்பட கூட்டரங்க நிகழ்ச்சிக்கான கைக்கடிகாரத்தில் பொருந்தியுள்ள உடுப்புக்கணினி. குனூ லினக்ஸ் (GNU Linux) இயக்கு தளம் வழி இயங்கும் கணினி.

அணி கணினிகள் செயற்பாட்டுக்கும் நிறைய கணிக்கும் திறன் வேண்டும். பல்வேறு தரவுகளைப் பதியச் செய்யவும், ஒப்பிட்டுப் பார்க்கவும், புதிய தரவுகளை இணையவழிப் பெறவும், பிற இடங்களுக்குச் செலுத்தவும் பயன்படும். இந்த உடுப்புக் கணினிகளுக்குத் தேவையான மின்னாற்றலும் சூழிடங்களில் இருந்தே பெறப்படும். கூடவே எடுத்துச் செல்லும் மின்கலங்கள், சூழலில் உள்ள ஒளியை மின் ஆற்றலாக மாற்றும் ஒளி மின்கலங்கள் முதலிவற்றால் பெறப்படும்.

காண்க தொழில்நுட்ப அணி

எடுத்துக்காட்டுக்கள்

தொகு
 
சுட்டிக்கடிகாரம்
  • எடுத்துக்காட்டாக, மூக்குக் கண்ணாடிபோல் அணிந்திருக்கும் ஓர் அணிகணினி, தொலைவில் உள்ளதை மிக அருகில் உள்ளதுபோல காட்ட துணை செய்யும், தொலைவில் பேசுவதை அருகிலிருந்து கேட்பதுபோல் கேட்க உதவும்.
  • மைன்ட்வேவ் நடமாடும் மூளைக் கட்டுப்பாட்டு இடைமுகம் - MindWave Mobile Brain Control Interface
  • கூகிள் கண்ணாடி
  • நுண் மணிக்கூடு
  • Nymi Authentication Wristband
  • Heapsylon Sensoria Smart Sock Fitness Tracker

மேற்கோள்கள்

தொகு
  1. Wearable Computing (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-23. {{cite book}}: |website= ignored (help)
  2. Barfield, Woodrow (2015-07-29). Fundamentals of Wearable Computers and Augmented Reality, Second Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781482243512.
  3. Mann, Steve (2012): Wearable Computing. In: Soegaard, Mads and Dam, Rikke Friis (eds.). "Encyclopedia of Human-Computer Interaction". Aarhus, Denmark: The Interaction-Design.org Foundation.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணியக்கூடிய_கருவி&oldid=3931793" இலிருந்து மீள்விக்கப்பட்டது