அணுக்க வில்லை
அணுக்க வில்லை (zoom lens) என்பது குவியத் தொலைவும் (எனவே பார்வைக் கோணமும்) வேறுபடுத்த முடிந்த வில்லை உறுப்புகளின் எந்திரவியல் தொகுப்பாகும்; மாறாத குவியத் தொலைவு வில்லைக்கு எதிரானதாகும். அணுக்க வில்லை என்பது உருப்பெருக்கத்தை மாற்ற உதவும் வில்லைத் தொகுதி ஆகும். இதில் பொருளின் உருவம் ஏறக்குறைய ஒரே நிலைத்த தளத்தில் தான் அமைந்திருக்கும். இதில் வில்லைகளின் இருப்பிடங்களை மாற்றுவதனால் குவியத்தொலைவை மாற்றி உருப்பெருக்கத்தின் அளவை மாற்றலாம்.
மாற்றப்படும் குவியத்தொலைவின் அளவிற்கேற்றபடி நேரியல்பு நிலையில் துளைத் தகட்டைத் (Diaphragm) திறந்தால் வில்லைத்தொகுதியின் மொத்தச்சார்பு துளைப்பரப்பு (Relative aperture) மாறாமல் இருக்கும்.[1] இந்த வில்லைப் பெயர்ச்சிகளின் போது உண்டாகும் உருவத்தில் ஏற்படும் பிழை மிகக் குறைவாக உள்ளபடி இந்த வில்லையமைப்பை வடிவமைக்க வேண்டும். அதாவது இந்த அணுக்கல் (Zooming) முறையின் தொடக்கத்திலும் இறுதியிலுமாவது உருவத்தில் ஏற்படும் பிழை மிகப் பெரிதாகாமல் இருக்கும்படியும் வில்லைத் தொகுதியை அமைக்க வேண்டும். அணுக்க வில்லை வடிவமைக்கும் தொடக்க காலங்களில் பதினைந்திற்கும் மேற்பட்ட வில்லைகள் இதில் பயன்படுத்தப்பட்டன. தற்காலத்தில் நான்கே வில்லைகளைப் பயன்படுத்துகின்றனர். பொதுவாக அணுக்கத் தகவு (Zoom ratio) 3:1 ஆக இருக்கும். இதை 4:1 ஆக மாற்ற முடியும். இந்த அணுக்கல் விளைவைப் (Zooming effect) பெற ஒற்றை நிற இயங்குபட்டைகளைச் சில நேரங்களில் பயன்படுத்துவது உண்டு.
உண்மை அணுக்க வில்லை (அல்லது ஒளியியல் அணுக்க வில்லை), மாறுகுவிய வில்லை(parfocal lens) எனவும் அழைக்கப்படுகிறது. இதில் குவியத் தொலைவு மாறினாலும் குவிதிறம் மாறாது.[2] பெரும்பாலான நுகர்வோர் அணுக்க வில்லைகள் சரிநேர் குவிதிறத்தைப் பேணுவதில்லை; என்றாலும் அவை அணுக்க வில்லைகள் தாம். பெருபாலான படவொலிக் கருவிகள் ஒளியியல் அணுக்கத்தைக் கொண்டிருப்பதாக விளம்பரப்படுத்தப்படுகின்றான. உண்மையில் அவை வேறுபட்ட மாறாத குவியத்தொல்லைவுகள் உள்ள சில படக்கருவிகளைக் கூட்டாகப் பயன்படுத்துகின்றன; இவை இலக்கவியல் அணுக்க முறை அமைந்த கலப்பு அமைப்புகளாகும்.
மாறும் குவியத் தொலைவு கூடுதல் செலவாலும் படிமத் தரம், எடை, பருமானங்கள், துளைப் பரப்பு, தற்குவிப்புச் செயல்திறம் போன்ற சில குறையேற்புகளாலும் தன் இயல்கிறது. எடுத்துகாட்டாக, அனைத்து அணுக்க வில்லைகளும் குவியத் தொலைவின் அறுதிநிலை நெடுக்கங்களில் ஓரளவு படிமப் பிரிதிறனை இழக்கின்றன. அதாவது அவற்றின் பெரும, சிறுமத் துளைப் பரப்புகளில் உருவப் பிரிதிறன் குறைகிறது. இவ்விளைவு உயர் பிரிதிறன் படிவங்களில் படிம ஓரங்களில் தெளிவாகத் தெரியும். அணுக்க வில்லை அளிக்கும் குவியத் தொலைவு மாற்ற நெடுக்கம் கூடும்போது, குறையேற்புகளின் பருமையும் கூடும்.[3]
மேலும் காண்க
தொகு- அணுக்குதல் (படல உருவாக்கம்)]]
- சாய்தட்டு அணுக்க வில்லை (PTZ)
- தொழில்முறை காணொலிப் படக்கருவி
- சூமார் வில்லை
- குவியத் தொலைவை வைத்து
- அகல் கோண வில்லை
- இயல்பு வில்லை
- தொலை ஒளிப்படவில்லை
- முதன்மை வில்லை
சான்றுகள்
தொகு- ↑ Cavanagh, Roger (2003-05-29). "Parfrocal Lenses". Archived from the original on 2007-10-07. பார்க்கப்பட்ட நாள் 2007-11-18.
- ↑ Cavanagh, Roger (2003-05-29). "Parfrocal Lenses". Archived from the original on 2007-10-07. பார்க்கப்பட்ட நாள் 2007-11-18.
- ↑ "Tamron 18-270mm f/3.5-6.3 Di II VC LD Lens Review". Archived from the original on January 16, 2013. பார்க்கப்பட்ட நாள் March 20, 2013.
தகவல் வாயில்கள்
தொகு- Kingslake, R. (1960), "The development of the zoom lens". Journal of the SMPTE 69, 534
- Clark, A.D. (1973), Zoom Lenses, Monographs on Applied Optics No. 7. Adam Hildger (London).
- Malacara, Daniel and Malacara, Zacarias (1994), Handbook of Lens Design. Marcel Dekker, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8247-9225-4
- "What is Inside a Zoom Lens?". Adaptall-2.com. 2005.