அணைப்பட்டி பாறை ஓவியங்கள்

அணைப்பட்டி பாறை ஓவியங்கள், தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள அணைப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள சித்தர் மலையில் உள்ள குகையொன்றில் தீட்டப்பட்டுள்ள பாறை ஓவியங்கள் ஆகும். இக்குகைக்கு அருகில் சமணக் குகை ஒன்றும் உள்ளது. இங்குள்ள ஓவியங்களில் குதிரை, மான் என்பன உள்ளிட்ட விலங்கு உருவங்களும், மனித உருவமும், வண்டியொன்றின் உருவமும் தீட்டப்பட்டுள்ளன.[1] ஒரு ஓவியத்தில் குதிரை மீது ஏதோ இருக்கும் காட்சி வரையப்பட்டுள்ளது. குதிரை மீது இருப்பது மனிதனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஓவியம் சிவப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ளது.[2]

காலம்

தொகு

இது வரலாற்றுக் காலத்துக்கு முந்தியதாக இருக்கக்கூடும் என்ற கருத்தும், இல்லை, இது வரலாற்றுக் காலத்துக்கு உரியது என்ற கருத்தும் நிலவுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 பவுன்துரை, இராசு., 2001, பக். 73
  2. Dayalan, D., Rock Art in Tamil Nadu and its Archaeological Perspective, p. 11

உசாத்துணைகள்

தொகு
  • பவுன்துரை, இராசு., தமிழகப் பாறை ஓவியங்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.

இவற்றையும் பார்க்கவும்

தொகு