அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோயில்

அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற வீர ஆஞ்சநேயர் கோவில் வைகை ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது.[1][2] நிலக்கோட்டையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் வத்தல்குண்டுவிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும் அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ள இத்தலம் மிகவும் பழமைவாய்ந்ததாகும்.[3]

மூலவரான ஆஞ்சநேயர் ஆறடி உயரத்தில் உள்ளார். வலது கையால் சஞ்சீவி மலையை தூக்கியபடியும், இடது கையை தொடையில் வைத்தும் உள்ளார். இவருடைய கண்களில் ஒன்று அயோத்தியையும், மற்றொன்று பக்தர்களை பார்ப்பதாகவும் நம்புகிறார்கள்.

இக்கோயிலில் விநாயகர், நாகர், சப்தகன்னியர்கள் மற்றும் கருப்பண்ணசாமி சன்னதிகள் உள்ளன. நவகிரகங்களுக்காக பீடம் அமைக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு

தொகு

அம்மைநாயக்கனூர் சமீந்தாரான காமயசாமி என்பவரின் கனவில் ஆஞ்சநேயர் தோன்றி இவ்விடத்தில் சுயம்புவாக இருப்பதை தெரிவித்தார். இத்தலத்தில் தாழம்பூ புதரை சுத்தம் செய்து பார்த்தபோது சிறிய பாறையாக இருந்தமையை தோண்டி சுயம்பு ஆஞ்சநேயராக வழிபட்டுள்ளனர். ஜமீன்தார் இக்கோயிலை கட்டியுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. தினத்தந்தி (2021-08-08), "தடையை மீறி தர்ப்பணம் செய்ய குவிந்த மக்கள்", www.dailythanthi.com, பார்க்கப்பட்ட நாள் 2023-12-23
  2. http://temple.dinamalar.com/New.php?id=692
  3. "அணைப்பட்டி சிறீ ஆஞ்சநேயர்". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2016/apr/08/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-1309973.html. பார்த்த நாள்: 23 December 2023.