அண்டார்டிகா கடல்சார் உயிரினங்கள் பாதுகாப்பு மாநாடு
அண்டார்டிகா கடல்சார் உயிரினங்கள் பாதுகாப்பு மாநாடு என அழைக்கப்படும் அண்டார்டிகா கடல்சார் உயிரினங்கள் பாதுகாப்பு ஆனையம் (Convention on the Conservation of Antarctic Marine Living Resources or Commission on the Conservation of Antarctic Marine Living Resources, (CCAMLR), டிசம்பர் 1959 அண்டார்டிக்கா ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இம்மாநாடு 1 ஆகஸ்டு 1980 அன்று தொடங்கி 7 ஏப்ரல் 1982இல், அண்டார்டிகா கடல்சார் உயிரினங்கள் பாதுக்காப்பு ஆனையம் நிறுவப்படுதில் முடிவடைந்தது. அண்டார்டிகா கடல் பகுதியில் மாசுக்கட்டுப்பாடுகள் மேற்கொள்வது, கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தை வளர்ப்பதே இம்மாநாட்டின் இலக்கு ஆகும்.
தென்முனைப் பெருங்கடலில் உலகின் மிகப்பெரிய கடல்சார் உயிரினப் பூங்காவை அமைக்கவும், கடல்சார் உயினங்களின் இனப்பெருக்கதை அதிகரிக்கவும், உணவுக்காக மீன் போன்ற கடல்சார் உயிரினங்களை பெரும் அளவில் வேட்டையாடுவதைத் தடுக்கவும் ஆனையத்தின் முக்கியப் பணியாகும்.[1] இந்த மாநாட்டில் அண்டார்டிகாவில் கடல்சார் உயிரினப்பூங்காவை அமைப்பதற்கும், அதனை நிர்வகிக்க ஆனையத்தை அமைப்பதை ஆதரித்து 14 நாடுகள் கையொப்பமிட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 35 நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளது.[2]
பன்னாட்டு கடல்சார் உயிரினங்கள் காப்பகம்
தொகுஅண்டார்டிகா கடல்சார் உயிரினங்கள் பாதுகாப்பு மாநாட்டின் உடன்படிக்கையின் தொடர்ச்சியாக 28 அக்டோபர் 2016இல், அண்டார்டிகாவின் ரோஸ் கடலில் 5,98,000 சதுர மைல் பரப்பில், உலகின் மிகப்பெரிய பன்னாட்டு கடல் உயிரினங்கள் காப்பகம் அமைக்க ஐக்கிய அமெரிக்க நாடு, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 24 நாடுகள் பன்னாட்டு உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது.[3] இந்த ஒப்பந்தப்படி, இக்கடல் பரப்பில் மீன் போன்ற கடல்வாழ் உயிரினங்களை வேட்டையாட தடை செய்யப்படுகிறது.[4] பன்னாட்டு கடல்சார் உயிரினங்கள் காப்பகம் நியுசிலாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளால் நிர்வகிக்கப்படும்.[5]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Commission for the Conservation of Antarctic Marine Living Resources". ccamlr.org. 2011. பார்க்கப்பட்ட நாள் 11 October 2011.
- ↑ LinkPDF
- ↑ World's Largest Marine Reserve Created Off Antarctica
- ↑ World's largest marine park created in Ross Sea in Antarctica in landmark deal
- ↑ உலகின் மிகப்பெரிய கடல்சார் உயிரின சரணாலயம்
- CIA World Factbook 2003 edition
வெளி இணைப்புகள்
தொகு- Convention on the Conservation of Antarctic Marine Living Resources
- Full text of document பரணிடப்பட்டது 2010-05-05 at the வந்தவழி இயந்திரம்
- "CCAMLR's Management of the Antarctic" பரணிடப்பட்டது 2009-09-13 at the வந்தவழி இயந்திரம் (PDF)