அண்ணா சுப்பிரமணியன்
அண்ணா சுப்பிரமணியன் (Sri Anna Subramanian), நண்பர்களாலும், அன்பர்களாலும் சுருக்கமாக அண்ணா என அழைக்கப்படும் அண்ணா சுப்பிரமணியன் ஆன்மீக எழுத்தாளர் ஆவார். இவர் நூற்றிக்கும் மேற்பட்ட ஆன்மீக, சமய நூல்களை சமசுகிருத மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
இவர் சென்னை இராமகிருஷ்ண மடத்தின், மயிலாப்பூர் ஆதரவற்றோர் பள்ளியின் ஆசிரியராகவும், முதல்வரகவும், இயக்குநராகவும் தமது 97வது வயது வரை பணியாற்றியவர்.
இளமை வாழ்க்கை
தொகுபிற்காலத்தில் அண்ணா (ANNA) அழைக்கப்பட்ட சுப்பிரமணியண், நாகநரசிம்மன் - அருந்ததி இணையருக்கு 20 செப்டம்பர் 1895ல், திருச்செங்கோட்டில் பிறந்தவர்.
திருச்சிராப்பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து, சென்னை, இராமகிருஷ்ண மடத்தின், மயிலாப்பூர் ஆதரவற்றோர் பள்ளி ஆசிரியராக பொறுப்பேற்றார்.
எழுத்தாளராக
தொகு1957ல் அண்ணா சுப்பிரமணியன் பகவத் கீதைக்கு விளக்க உரை நூலை வெளியிட்டார். நூற்றுக்கும் மேற்பட்ட சமசுகிருத ஆன்மிக நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
அண்ணாவின் படைப்புகள்
தொகுஅண்ணாவின் படைப்புகள் முழுவதும் சென்னை, இராமகிருஷ்ண மடத்தின் மூலம் வெளியானது[1].
- ஆதித்திய இருதயம் (தமிழ்)
- அத்யாத்ம இராமாயணம் (தமிழ்)
- அஸ்டோத்திர சதநாமாவளி
- பஜ கோவிந்தம் (தமிழ்)
- பிரம்ம சூத்திரத்துடன் சாந்தோக்கியம் மற்றும் பிரகதாரண்யகம் (சுருக்கப்பதிவு) ,
- தேவி பாகவத சாரம் - பகுதி 1, 2, 3
- தேவி மகாத்மியம் (தமிழ் உரையுடன்)
- தேவி மகாத்மியம் (மூலம் - தமிழில்)
- தேவி மகாத்மியம் (சப்த சதி)
- தேவி மகாத்மியம் (சப்த சதி - தமிழ் உரை)
- தேவி தோத்திரங்கள்
- தேவி சூக்தங்களும், உபநிசதங்களும்
- குரு கீதை
- ஈசா, கேன மற்றும் கதா உபநிசத சாரம்
- ஈசாவாஸ்ய உபநிசதம்
- ஜெப விதானம்
- மகாநாராயண (தைத்ரிய நாராயண வல்லி) உபநிச சாரம்
- முத்திர விதானம்
- நவராத்திரி பூஜா
- நாரதா பக்தி சூத்திரங்கள்
- பூஜா விதானம் (சமசுகிருதம் & தமிழ்)
- பிரஸ்ன, முண்டக மற்றும் ஐதரேய உபநிசத்துகளின் சாரம்
- புருஷ சூக்தம் (தமிழ்)
- சந்தியாவந்தனம் (தமிழ் & சமசுகிருதம்)
- சுந்தர காண்டம் - பகுதி 1 - 2 (தமிழ்)
- சிவ தோத்திரங்கள்
- சிவானந்தலஹரி பாஷ்யம் (தமிழ்)
- சிவானந்தாலஹரி மூலம் (தமிழ்)
- பகவத் கீதை (உரையுடன் - தமிழ்)
- பகவத் கீதை (மூலம் - தமிழ்)
- ஸ்ரீருத்ரம் (நூல்)
- சௌந்தர்யலஹரி பாஷ்யம் (உரை -தமிழ் - சமசுகிருதம்)
- சௌந்தர்யலஹரி மூலம் (தமிழ்)
- ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம பாஷ்யம் (தமிழ் - சமசுகிருதம்)
- ஸ்ரீ லலிதா திரிசதி பாஷ்யம் (தமிழ் - சமசுகிருதம்)
- விஷ்ணு சகஸ்ரநாமம் (தமிழ் - சமசுகிருதம்)
- ஸ்ரீமத் நாராயணீயம் - தமிழ்
- 108 உபநிசதங்களின் சாரம் - பகுதி 1, 2, 3
- மகாபாரத சாரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Anna Subramaniam's Book Release Function". Archived from the original on 2018-05-09. பார்க்கப்பட்ட நாள் 2018-05-16.
உசாத்துணை
தொகு- Ramakrishna Students Home Souvenir, 1993, Special issue dedicated to Sri ANNA.
- Sahana Jayaraman, "As We Cherish", 2010, Create Space, subsidiary of Amazon.com, USA.