அதா கான் என்பவர் இந்திய தொலைக்காட்சி நடிகையும் மாடலும் ஆவார்.[2] இவர் நாகின் என்ற இந்தித் தொடரில் ஷேஷா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.[3][4]

அதா கான்
அதா கான்
பிறப்புஅதா கான்
12 மே 1989 (1989-05-12) (அகவை 34)[1]
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகை, மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2009—தற்போது வரை
அறியப்படுவதுநாகின்

தொழில் வாழ்க்கை தொகு

அதா கான், மராட்டிய மாநிலத்தில் மும்பை நகரில் 12 மே 1989ம் நாளன்று பிறந்தார். அவர் ஒரு மாடலாக தன் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு அவர் பல விளம்பரங்களில் நடித்தார். அவர் சோனி இந்தியா தொலைக்காட்சியின் பலம்பூர் எக்ஸ்பிரஸ் என்ற தொடரின் மூலம் சின்னத்திரை உலகில் அறிமுகமானார்.

2010ம் ஆண்டு பெஹனேன் தொடரில் ஆகாஷி என்ற துணை கதாபாத்திரத்தில் அதா கான் நடித்தார்.[5] பிறகு அவர் 2012ம் ஆண்டு லைஃப் ஓகே தொலைக்காட்சியில் அம்ரித் மந்தன் என்ற தொடரில் ராஜ்குமாரி அம்ரித் கவூர் என்ற முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தார்.[6] பிறகு ஒருசில தொடர்களில் பகுதி கதாபாத்திரமாக நடித்தார்.நவம்பர் மாதம் 2015ம் ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளியான நாகின் தொடரில் நாகினியாக அதா கான் நடித்தார். அத்தொடர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. பிறகு அவர் நாகின் தொடரின் இரண்டாம் பருவத்திலும் நடித்தார்.[7]

மேலும் அதா கான் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். அவர் 2016ம் ஆண்டு நடந்த பாக்ஸ் கிரிக்கெட் லீக் போட்டியில் ஜெய்ப்பூர் ராஜ் ஜோஷிலே என்ற அணிக்காக விளையாடினார்.

விருதுகள் தொகு

ஆண்டு விருது பகுப்பு கதாபாத்திரம் தொடர் முடிவு
2011 ஸ்டார் பரிவார் விருதுகள் பிடித்த பெஹன் (தங்கை) ஆகாஷி பெஹனேன் பரிந்துரை
2013 இந்தியன் டெல்லி விருதுகள் எதிர்மறை கதாபாத்திரத்தில் சிறந்த நடிகை (நடுவர் தேர்வு) அம்ரித் அம்ரித் மந்தன் வெற்றி
எதிர்மறை கதாபாத்திரத்தில் சிறந்த நடிகை (மக்கள் தேர்வு) பரிந்துரை[8]
2016 லயன்ஸ் கோல்ட் விருதுகள் எதிர்மறை கதாபாத்திரத்தில் சிறந்த நடிகை ஷேஷா நாகினி வெற்றி
போரோப்ளஸ் கோல்ட் விருதுகள் எதிர்மறை கதாபாத்திரத்தில் சிறந்த நடிகை (விமர்சனம்) வெற்றி
எதிர்மறை கதாபாத்திரத்தில் சிறந்த நடிகை (மக்கள் தேர்வு) பரிந்துரை
இந்தியா நியூஸ் விருதுகள் ஆண்டின் சிறந்த ஸ்டார் வெற்றி
2017 இந்தியன் கலாக்கார் விருதுகள் எதிர்மறை கதாபாத்திரத்தில் சிறந்த நடிகை வெற்றி
போரோப்ளஸ் கோல்ட் விருதுகள் எதிர்மறை கதாபாத்திரத்தில் சிறந்த நடிகை (விமர்சனம்) வெற்றி

ஆதாரங்கள் தொகு

  1. Mulla, Zainab (14 May 2016). "Hotness Alert! Naagin actresses Mouni Roy chilling on the beaches of Goa, Adaa Khan celebrates birthday in Srinagar". http://www.india.com/showbiz/hotness-alert-naagin-actresses-Mouni-Roy-chilling-on-the-beaches-of-goa-Adaa-Khan-celebrates-birthday-in-srinagar-1184818/. பார்த்த நாள்: 1 June 2016. 
  2. Uniyal, Parmita (12 May 2016). "Birthday special: Five reasons we love Adaa Khan aka Sesha of Naagin". India Today. http://indiatoday.intoday.in/story/birthday-special-five-reasons-we-love-adaa-khan-aka-sesha-of-naagin/1/666237.html. பார்த்த நாள்: 6 August 2016. 
  3. "Playing Naagin is challenging for Adaa Khan". The Indian Express. 25 December 2015. http://indianexpress.com/article/entertainment/television/playing-naagin-is-challenging-for-adaa-khan/. பார்த்த நாள்: 5 August 2016. 
  4. Naagin actress Adaa Khan cuts a pretty figure in her latest photo shoot
  5. "Behenein brings more spice with IPL!". One India. 25 March 2010. http://entertainment.oneindia.in/television/news/2010/behenein-spice-ipl-250310.html. பார்த்த நாள்: 5 August 2016. 
  6. Agarwal, Stuti (25 February 2013). "Adaa Khan inspired by Rekha". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/tv/news-interviews/Adaa-Khan-inspired-by-Rekha/articleshow/18676968.cms. பார்த்த நாள்: 5 August 2016. 
  7. "Adaa Khan in Naagin 2". timesofindia.com. http://m.timesofindia.com/tv/news/hindi/Adaa-Khan-in-Naagin-2/articleshow/53584556.cms. பார்த்த நாள்: 8 August 2016. 
  8. "The Twelfth Indian Telly Awards - Nominate your Favourites". Indiantelevision.com இம் மூலத்தில் இருந்து 16 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131016123445/http://tellyawards.indiantelevision.com/y2k13/poll/winners.php. பார்த்த நாள்: 5 August 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதா_கான்&oldid=3532024" இருந்து மீள்விக்கப்பட்டது