அதிகாயன்
அதிகாயன் என்பவர் இராவணன், தான்யமாலினி தம்பதிகளின் மகனாவார். இராமன் - இராவணன் போரில் முன்னணித் தளபதிகளான திரிசிரன், மகோதரன், நராந்தகன், தேவாந்தகன் போன்றோர் மாண்ட பிறகு அதிகாயனே இராவணப் படைக்கு தலைமையேற்றான். பிரம்மாவை நோக்கி தவமிருந்து கவசமும், தங்க ரதமும் பெற்றான். இவன் இலட்சுமணன் எய்த பிரம்மாஸ்திரத்தினால் இறந்தான்.[1]