தான்யமாலினி

 

தான்யமாலினி
தான்யமாலினி (நடுவில்) மண்டோதரி (இடது) இருவரும் அவர்களது அண்ணியுடன் சூர்ப்பணகை (வலது); வாத் சுதாத், பாங்காக் இல் உள்ள ராமாகியனில் இருந்து ஒரு படக்காட்சி
வேறு பெயர்கள்தானியமாலி, தன்யமாலினி
வகைஅரக்கர் குலம்
இடம்லங்கா
குழந்தைகள் (ராமாயணத்தின் பதிப்புகள்)

தன்யமாலா மற்றும் தானியமாலி என்றும் குறிப்பிடப்படும் தான்யமாலினி, இந்து இதிகாசமான ராமாயணத்தில் அரக்கனும் எதிரியுமான ராவணனின் இரண்டாவது மனைவியாவார். ராமாயண இதிகாசத்தில் அரிதாகவே குறிப்பிடப்பட்டுள்ள இவர், லட்சுமணனுக்கு இணையான வீரனாகவும் இராவணப் படைக்கு தலைமையேற்று போரை நடத்திய அதிகாயாவின் தாயாகப் புகழ் பெற்றவர் . தமிழில் எழுதப்பட்டுள்ள கம்பராமாயணத்தில் அதிகாயன் தான்யமாலினியின் வளர்ப்பு மகனாக குறிப்பிடப்பட்டுள்ளது. [1] ராமாயணத்தின் வேறு சில பதிப்புகளில், தானியமாலினிக்கும் இராவணனனுக்கும், அதிகாயன், நராந்தகா, தேவந்தகா மற்றும் திரிஷிரா என்ற நான்கு மகன்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. [2] [3] [4]


தான்யமாலினி, மண்டாேதரியின் இளைய சகோதரியும், மயனின் இளைய மகளுமாவார்.இவரை, மென்மையான மற்றும் அக்கறையுள்ள பெண்ணாக குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் ராவணனை அவமதித்த சீதையை ராவணனின் கோபத்திலிருந்து பெரும்பாலான சமயங்களில் தான்யமாலினியே காப்பாற்றியதாக சில ராமாயண பதிப்புகளில் குறிப்பிடப்படுகிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. www.wisdomlib.org (2019-01-28). "Story of Atikāya". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-11.
  2. https://www.dek-d.com/board/view/1665174/
  3. Nāyuḍū, Su Śaṅkara Rājū; Shankar Raju Naidu, S. (1971). "A Comparative Study of Kamba Ramayanam and Tulasi Ramayan".
  4. "2 Wives of Ravana – and Their Legends". Archived from the original on 2022-12-10. பார்க்கப்பட்ட நாள் 2023-03-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தான்யமாலினி&oldid=4110221" இலிருந்து மீள்விக்கப்பட்டது