அதிசயம் (உணர்ச்சி)

அதிசயம் (Wonder (emotion)) என்பது அரிதான அல்லது எதிர்பாராத ஒன்றை உணரும் போது மக்களால் உணரக்கூடிய ஆச்சரியத்துடன் ஒப்பிடக்கூடிய ஓர் உணர்ச்சியாகும். பரவலாக இவ்வகையான உணர்ச்சிகள் அச்சுறுத்தலாக இருப்பது இல்லை). இது வரலாற்று ரீதியாக மனித இயல்பின் ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது, குறிப்பாக ஆர்வத்துடன் தொடர்புடையது.[1] ஆச்சரியம் என்பது பெரும்பாலும் பிரமிப்பு உணர்வுடன் ஒப்பிடப்படுகிறது [2] ஆனால் பிரமிப்பு என்பது மகிழ்ச்சியைக் காட்டிலும் பயம் அல்லது மரியாதையைக் குறிக்கிறது. அறிவியல் புனைகதைகள் ஒரு அதிசய உணர்வை உருவாக்கும்.

நான் ஆச்சரியப்படுகிறேன் ... , படம். (1978)

தத்துவ சிந்தனைகள்

தொகு

பிரெஞ்சு தத்துவஞானி, கணிதவியலாளர், விஞ்ஞானி மற்றும் எழுத்தாளரான ரெனே டேக்கார்டு போற்றுதலை முதன்மை உணர்ச்சிகளில் ஒன்றாக விவரித்தார், ஏனென்றால் உணர்ச்சிகள் பொதுவாக எதிர்பாராத நிகழ்வுகளுக்கான எதிர்வினைகள் என்று கூறினார். மக்கள் முதன்முதலில் ஒரு ஆச்சரியமான அல்லது புதிய பொருளைச் சந்திக்கும் போது, "நாம் முன்னர் அறிந்திருந்தோ அல்லது நாம் நினைத்ததைவிட மிகவும் வேறுபட்டதாக இருக்கும் போது அதைப் போற்றுவதாகவும், அதைக் கண்டு ஆச்சரியப்படுவதாகவும்" அவர் குறிப்பிட்டார். [3]

சான்றுகள்

தொகு
  1. Fisher
  2. "Keltner" (PDF). Archived from the original (PDF) on 2011-09-29. பார்க்கப்பட்ட நாள் 2023-11-16.
  3. Descartes, Rene. The Passions of the Soul. Article 53.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிசயம்_(உணர்ச்சி)&oldid=4108808" இலிருந்து மீள்விக்கப்பட்டது