அதிமீயொலி ஆயுதம்

அதிமீயொலி ஆயுதம் என்பது ஒலியின் வேகத்தை விட 5 முதல் 25 மடங்கு அல்லதுவினாடிக்கு 1 முதல் 5 மைல்கள் (1.6 முதல் 8.0 கிமீ/வி) வரையிலான அதிமீயொலிவேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட ஆயுதம் ஆகும்.[1]:{{{3}}}

பி-52 குண்டுவீச்சு வானூர்தி சுமந்து செல்லும் வான்வழி விரைவு மறுமொழி ஆயுதம்

அத்தகைய வேகத்திற்குக் கீழேயுள்ள ஆயுதங்கள் குறைஒலிவேகம் அல்லது மீயொலிவேகம் என வகைப்படுத்தப்படும். அதே நேரத்தில் அத்தகைய வேகத்திற்கு மேல் செல்லும்போது, வளிமண்டலத்தின் மூலக்கூறுகள் அயனிமமாகப் பிரிந்து, கட்டுப்பாட்டையும் தகவல்தொடர்பையும் கடினமாக்குகிறது.

பல வகையான அதிமீயொலி ஆயுதங்கள் உள்ளன:

  1. அதிமீயொலி சறுக்கு வாகனம்
  2. அதிமீயொலி சீர்வேக ஏவுகணை
  3. அதிவேகத்தை அடைய மீத்திமிசுத்தாரை போன்ற காற்றை சுவாசிக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தும் அதிமீயொலி வானூர்தி[1]:{{{3}}}
  4. பீரங்கியால் ஏவப்பட்ட, வழிகாட்டப்பட்ட எறிகணைகளை சுடும் ஆயுதங்கள்

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. 1.0 1.1 John T. Watts; Christian Trotti; Mark J. Massa (August 2020), Primer on Hypersonic Weapons in the Indo-Pacific Region (PDF), Atlantic Council, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61977-111-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிமீயொலி_ஆயுதம்&oldid=3939800" இலிருந்து மீள்விக்கப்பட்டது