அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி

அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழ்நாட்டில் தருமபுரியில் அமைந்துள்ள அரசுப்பள்ளியாகும்.[1]1857-ஆம் ஆண்டு தெலுங்கு ஆரம்பப்பள்ளியாக தொடங்கப்பட்ட இப்பள்ளி 1884-ல் நடுநிலைப்பள்ளியாகவும் 1917-ல் உயர்நிலைப்பள்ளியாகவும் 1978-ல் மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டு கல்விப் பணியில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.

அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தருமபுரி
தகவல்
தொடக்கம்1857, தெலுங்கு ஆரம்பப்பள்ளி.
பள்ளி மாவட்டம்தருமபுரி
கல்வி ஆணையம்முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்
தரங்கள்ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை
பால்ஆண்கள்
மாணவர்கள்3
கல்வி முறைதமிழ்நாடு மாநிலப் பள்ளிக் கல்வித் திட்டம்

தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சியின் பெயரைக் கொண்டுள்ளது. அதியமான் ஔவையாருக்கு நெல்லிக்கனி வழங்கிய காட்சியைக் காட்டும் தற்காலச் சிலை பள்ளி வளாகத்துள் நிருவப்பட்டுள்ளது.

"படிப்பு, பண்பாடு, பயனுள்ள வாழ்க்கை" என்பதே இப்பள்ளியின் குறிக்கோளாகும். இப்பள்ளி தருமபுரி மாவட்டத்தின் மையப்பகுதியில் உள்ளது. சிறந்த வகுப்பறைகள், நூலகம், அறிவியல் ஆய்வகம், கணினி அறை, பயிற்சி பட்டறைகள், LCD அரங்கம், விளையாட்டு மைதானம், உயரமான நுழைவாயில் போன்றவை இப்பள்ளியின் சிறப்பம்சங்களாகும்.

சிறப்பு நிகழ்வுகள்

தொகு
  • 1940 -இல் நடைபெற்ற ஆண்டு விழாவில் ஜனாப் அப்துல்லா சாகிப் பகதூர் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தார்.
  • 1946 இல் நடைபெற்ற ஆண்டு விழாவில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் திரு. வி.வி. சுப்ரமணியம் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கியுள்ளார்.
  • ஆங்கிலேயர் ஆட்சி அகன்ற முதல் சுதந்திர தின விழா (15-08-1947) அன்று இப்பள்ளியில் கொண்டாடிய போது அன்றைய கோட்ட வருவாய் அலுவலர் (ஆர்.டி.ஓ.) முன்னிலை வகித்துள்ளார்.
  • இந்திய அரசியலைமைப்பு சட்டம் நடைமுறைபடுத்தப்பட்ட 26-01-1950 அன்று முதல் குடியரசு தின விழா இப்பள்ளியில் கொண்டாடிய போது அன்றைய எம்.எல்.ஏ. என்.ஜி. நடேசன்செட்டியார் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்துள்ளார்.
  • 2007-ஆம் ஆண்டு 150-ம் ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர்கள், தலைமையரிசியர் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் பள்ளியில் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு 150-ஆவது ஆண்டு விழா மலர் வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு