அதுல் கார்க்

இந்திய அரசியல்வாதி

அதுல் கார்க் (Atul Garg; பிறப்பு ஆகத்து 26,1957) என்பவர் இந்தியாவில் உத்திரப் பிரதேசம் காசியாபாத் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார், இவர் உத்தரப் பிரதேச அரசில் இணை அமைச்சராக இருந்துள்ளார். இவர் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக காசியாபாத் சட்டமன்றத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

அதுல் கார்க்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
04 சூன் 2024
முன்னையவர்விஜய் குமார் சிங்
தொகுதிகாசியாபாத் மக்களவைத் தொகுதி
உரம், வாட்கைக் கட்டுப்பாடு, நுகர்வோர் பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு-உத்தரப் பிரதேசம்
பதவியில்
21 ஆகத்து 2019 – 25 மார்ச்சு 2022
உணவு மற்றும் குடிமைப்பொருட்கள், உணவு பாதுகாப்பு, வாடகைக் கட்டுப்பாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர்
பதவியில்
19 மார்ச்சு 2017 – 21 ஆகத்து 2019
சட்டப் பேரவை உறுப்பினர், உத்தரப் பிரதேசம்
பதவியில்
11 மார்ச்சு 2017 – 04 சூன் 2024
முன்னையவர்சுரேஷ் பன்சால்
பின்னவர்காலியிடம்
தொகுதிகாசியாபாத் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 ஆகத்து 1957 (1957-08-26) (அகவை 67)
காசியாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
உறவுகள்தினேசு சந்திர கார்க் (தந்தை)
வாழிடம்(s)கே.டி., 14B, கவிநகர், காசியாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா
கல்விஇளநிலை வணிகவியல்
இணையத்தளம்https://www.atulgarg.in/

அரசியல் வாழ்க்கை

தொகு

கார்க் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார். 2012ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கட்சிக்காகப் பிரச்சாரம் செய்தார். பின்னர் 2017 தேர்தலில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினர் ஆனார்.[1] இவர் உணவு மற்றும் குடிமைப்பொருட்கள், உணவு பாதுகாப்பு, வாடகைக் கட்டுப்பாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகிய துறைகளின் மாநில அமைச்சராகப் பதவிவகித்தார்.[2]

பின்னணி

தொகு

கார்க் காசியாபாத் முதல் மாநகரத்தந்தையான தினேசு சந்திர கார்க்கின் மகன் ஆவார்.

கார்க் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகளில் தொழில்முனைவோர் கல்வியை ஊக்குவிப்பவர் ஆவார். பல்வேறு கல்லூரிகள் மூலம், தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டில் பயிற்சிகளை ஊக்குவித்து வருகிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Ghaziabad MLA Atul Garg takes charge as minister of state". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 4 April 2017. பார்க்கப்பட்ட நாள் 16 April 2019.
  2. "CM Yogi Adityanath keeps home, revenue: UP portfolio allocation highlights", ஹிந்துஸ்தான் டைம்ஸ், 22 March 2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதுல்_கார்க்&oldid=4123580" இலிருந்து மீள்விக்கப்பட்டது