அது, அகம், அதியகம்

அது, அகம், அதியகம் அல்லது இச்சை உணர்ச்சி, தன்முனைப்பு, பண்பாட்டுணர்ச்சி[1] (Id, ego and super-ego) என்பன சிக்மண்ட் பிராய்டின் மனத்தின் கட்டமைப்பு மாதிரியை விளக்கும் உளச் செயற்பாட்டின் மூன்று பகுதிகள். அவை செயல் மற்றும் இடையூடாட்ட மன வாழ்வை விளக்கும் மூன்று கோட்பாட்டு அமைப்புக்களாகும். மன மாதிரியின்படி, அது ஒருங்கிணைக்கப்படாத உள நிகழ்வுகளின் போக்கின் அமைப்பாகவும், அகம் ஒருங்கிணைக்கப்பட்ட உண்மைப் பகுதியாகவும், அதியகம் முக்கிய மற்றும் நன்னெறிப்படுத்தும் பாத்திரமாகவும் இருக்கும்.[2]

இவ்வாறு இருப்பினும் மாதிரியானது அமைப்பு மற்றும் கருவியை தொடர்பு கொள்ளச் செய்யும் ஒன்றாகும். அது, அகம், அதியகம் என்பன மூளையின் பகுதியாகவன்றி மனத்தின் செயற்பாடாகவும், நரம்புக் கூறு சரியான உடலியல் அமைப்பை செற்படுத்துவதுபோல் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு தொடர்புபட்டுக் காணப்படுவதில்லை.

சிக்மண்ட் பிராய்டின் சிந்தனை வளர்ச்சியின் பிற்பகுதியில் இவ்வெண்ணக் கருக்கள் உருவாகின. "அமைப்பு மாதிரி" அவருடைய கட்டுரையான "இன்ப கொள்கைக்கு அப்பால்" என்பதில் 1920இல் முதலில் கலந்துரையாடப்பட்டது. மூன்று வருடங்களின் பின் அவருடைய "அது, அகம், அதியகம்" என்பதில் வடிவமைக்கப்பட்டு, விரிவாக்கப்பட்டது. பிராய்டின் முன்மொழிவு பல பொருள் பதமான "நனவிலி" மற்றும் அதனுடைய பல்வேறு முரண்பாடான பாவனை ஆகியவற்றால் செல்வாக்குப் பெற்றது.

அது (Id)

தொகு

அது அடிப்படை ஊந்துதல்களைக் கொண்ட ஆளுமைக் கட்டமைப்பின் ஒருங்கிணையாத பகுதியாகும். அது சிற்றின்ப உணர்ச்சிகள் கொண்டது. இது உண்மைத்துவத்தின் தேவைக்கு பதிலளிக்காது உள நிகழ்ச்சிகளின் செயல்திற அடிப்படை மூலமாகும்.[3] இது "இன்பக் கொள்கைக்கு" ஏற்பவும், துன்பம் அல்லது இன்பமற்ற தூண்டல் உள நிகழ்ச்சிகளின் பதட்டத்தால் அதிகரிப்பதையும் தவிர்த்துச் செயற்படுகின்றது.[4]

அகம் (Ego)

தொகு

அகம் உண்மைக் கொள்கைக்கு ஏற்ப செயற்படுகின்றது. எ.கா: இது 'அது'வின் தூண்டலின் விருப்புக்கு ஏற்ப தேடுகின்றது. அதனால், வேதனையைவிட நீண்டகால இலாபத்திற்கு ஏற்ற உண்மை நிலையை நோக்கியதாக இருக்கின்றது.[5] அதே நேரம், பிராய்ட் அகமானது 'அது'விற்கும் உண்மை நிலைக்குமிடையே மத்தியஸ்தம் செய்ய முயல்கிறது எனவும், அது அடிக்கடி நனவிலி கட்டளைகளை அதன் முன் உணர்வுடன் மூடி கட்டுப்படுத்துகின்றது எனவும் குறிப்பிட்டார்.[6]

அதியகம் (Super Ego)

தொகு

பிராய்ட் தன் அதியக கருத்தினை முன்னைய அக தொடர்பிலிருந்து உருவாக்கினார்.[7] அவரின் கருத்துப்படி, அதியக நிறுவுதல் பெற்றோர் செயற்பாட்டுடன் அடையாளப்படுத்தப்பட்ட ஒரு வெற்றியுள்ள ஒர் நிகழ்வாக விபரிக்க முடியும் என்கின்றார். அதேவேளை அதியகம், பெற்றோர் இடத்தில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய கல்வியாளர்கள், ஆசிரியர்கள், முன் மாதிரியான ஆட்கள் ஆகியோரை உள்வாங்க முடியும்.[8]

இவற்றையும் பார்க்க

தொகு

நபர்:

தொடர்புபட்ட தலைப்புக்கள்:

குறிப்புகள்

தொகு
  1. "நாட்டுப்புறவியலும் உளவியலும்". பார்க்கப்பட்ட நாள் 14 மே 2017.
  2. Snowden, Ruth (2006). Teach Yourself Freud. McGraw-Hill. pp. 105–107. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-147274-6.
  3. Carlson, N. R. (19992000). Personality. Psychology: the science of behaviour (Canandian ed., p. 453). Scarborough, Ont.: Allyn and Bacon Canada.
  4. Rycroft, Charles (1968). A Critical Dictionary of Psychoanalysis. Basic Books.
  5. Noam, Gil G; Hauser, Stuart T.; Santostefano, Sebastiano; Garrison, William; Jacobson, Alan M.; Powers, Sally I.; Mead, Merrill (February 1984). "Ego Development and Psychopathology: A Study of Hospitalized Adolescents". Child Development (Blackwell Publishing on behalf of the Society for Research in Child Development) 55 (1): 189–194. https://archive.org/details/sim_child-development_1984-02_55_1/page/189. 
  6. Freud, New Introductory Lectures p. 110
  7. Freud, On Metapsychology p. 89-90
  8. Freud, New Introductory Lectures p. 95-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=அது,_அகம்,_அதியகம்&oldid=4176880" இலிருந்து மீள்விக்கப்பட்டது