அத்திப்புலியூர் சிதம்பரேசுவரர் கோயில்
இந்தியாவின் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்
அத்திப்புலியூர் சிதம்பரேசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
தொகுஇக்கோயில் நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் நாகப்பட்டினத்திற்கு மேற்கே 17 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கடுகையாற்றில் வடகரையில் உள்ளது. [1]
இறைவன், இறைவி
தொகுஅகத்தியருக்குத் திருமண கோலம் காட்டியதால் அம்மையப்பர் கல்யாணசுந்தரராகக் காட்சியளிக்கின்றார்.[1]
அமைப்பு
தொகுதெற்கு நோக்கிய நிலையில் மூலவர் சன்னதி அமைந்துள்ளது. கருவறையில் மூலவராக உள்ள லிங்கத்திருமேனியின் பின்புறம் கல்யாணசுந்தரர் காணப்படுகிறார். மாண்டவிய முனிவரின் சாபத்தினால் காட்னையாகத் திரிந்த சேரித்துவஜன் என்றழைக்கப்படும் பாண்டிய மன்னனும், புலிக்கால் முனிவரும் வழிபட்டதால் அத்தி-புலியூர் என்று பெயர் பெற்றது. [1]