அத்ரியன் பாங்

மலேசியாவில் பிறந்த சிங்கப்பூர் நடிகர்

அத்ரியன் பாங் இயோவ் சூன் ( Adrian Pang) 1966 சனவரி 8 அன்று இவர் மலேசியாவில் பிறந்த சிங்கப்பூரின் முன்னாள் நடிகர் ஆவார்.[1][2] FLY பொழுதுபோக்கு நிறுவனத்தின் கீழ் ஒரு நிகழ்ச்சியாளராகவும் மற்றும் ஒப்பந்த கலைஞராகவும் இருந்தார். 1990 முதல் 2010 வரை மீடியாகார்ப் என்ற நிறுவனத்தின் முழுநேர கலைஞராக இருந்தார். 1990 களில் மீடியா கார்ப் மற்றும் எஸ்.பி. எச் மீடியாவொர்க்ஸ் தயாரித்த சில ஆங்கில மொழி மற்றும் சீன மொழி தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து சிங்கப்பூர் தொலைக்காட்சியில் முதன்முதலில் முக்கியத்துவம் பெற்றார். அப்போதிருந்து, இவர் நிகழ்ச்சி நடத்துவதிலும் மற்றும் அரங்கத் தயாரிப்பில் பன்முகப்படுத்தப்பட்டார். மிக சமீபத்தில், கிறிஸ் ஹெம்ஸ்வர்த் மற்றும் வாங் லீ ஹோம் நடித்த ஹாலிவுட் கணினி குற்றப் பின்னணித் திரைப்படமான பிளக்கட் (2015) என்றப் படத்தில் இவர் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார். 2010 ஆம் ஆண்டில், மீடியாக்கார்ப் உடனான தற்போதைய ஒப்பந்தம் மார்ச் மாதத்தில் காலாவதியான பிறகு, மீடியா கார்பை விட்டு வெளியேறுவதாக பாங் அறிவித்தார்.

அத்ரியன் பாங்
பிறப்பு8 சனவரி 1966 (1966-01-08) (அகவை 58)
மலாக்கா, மலேசியா
தேசியம்சிங்கப்பூர்
கல்வி
  • ஆங்கிலோ-சீனப் பள்ளி
  • ஆங்கிலோ-சீன இளையோர் கல்லூரி
படித்த கல்வி நிறுவனங்கள்கேல் பல்கலைக்கழகம்
பணி
  • நடிகர்
  • தயாரிப்பாளர்
  • நிகழ்ச்சித் தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1990s-தற்போது வரை
முகவர்FLY என்டெர்டெயின்மென்ட்
வாழ்க்கைத்
துணை
திரேசு கோவிட் (தி. 1995)
பிள்ளைகள்2

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

பாங், மலேசியாவின் மலாக்காவில் பிறந்தார். ஆங்கிலோ-சீன பள்ளி மற்றும் ஆங்கிலோ-சீன இளையோர் கல்லூரியில் கல்வி பயின்றார் .[3] இவர் பிரிட்டனில் உள்ள கீல் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார் என்றாலும், பயிற்சி செய்யவில்லை, அதற்கு பதிலாக பப்வித்தில் உள்ள ஆர்ட்ஸ் சர்வதேச பயிற்சி மையத்தில் திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி மற்றும் மேடை பயிற்சி போன்ற பயிற்சிகளை பெற்றார். சிங்கப்பூர் திரும்புவதற்கு முன்பு பிரித்தன் நாடகத்திலும் தொலைக்காட்சியிலும் பல ஆண்டுகள் பணியாற்றினார். இவர் பிரித்தனில் வசிக்கும் போது, எப்போதாவது நிகழ்ச்சிசிகளுக்காக சிங்கப்பூர் திரும்புவார். அங்கு சிங்கப்பூர் நகைச்சுவைத் திரைப்படமான பாரெவர் பீவர் (1998) என்றப் படத்தில் நடித்தபோது சிங்கப்பூர் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

தொழில்

தொகு

நாடு திரும்பியதும், பாங் மீடியாக்கார்ப் நிறுவனத்தில் சேர்ந்தார். பின்னர் 2001 ஆம் ஆண்டில் எஸ். பி. ஹெச் மீடியாவொர்க் என்ற புதிய நிறுவனம் நிறுவப்பட்டபோது பாங் அதில் ஒரு தயாரிப்பாளராக மற்றும் தொகுப்பாளராக மாறினார். 2001 ஆம் ஆண்டில் தனது குடும்பத்தினருடன் நிரந்தரமாக சிங்கப்பூருக்கு திரும்பினார். எஸ். பி. ஹெச் மீடியாவொர்க் தொலைகாட்சியில் தனது பணியின் மூலம் இவர் விரைவில் தன்னை ஒரு சிங்கப்பூர்காரராக நிலைநிறுத்திக் கொண்டார். பல்துறை திறமை வாய்ந்த இவர் தொலைகாட்சியின் இறுதித் தயாரிப்பான "சிக்ஸ் வீக்ஸ்" என்ற நிகழ்ச்சியில் துரியன் கிங் என்ற நகைச்சுவை பாத்திரத்தின் மூலம் முக்கிய நடிகர், நிகழ்ச்சியாளர் மற்றும் நடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கினார். "சிக்ஸ் வீக்ஸ்" என்ற நிகழ்ச்சியின் இணை எழுத்தாளர் மற்றும் இவரது சொந்தக் கற்பனையின் மூலம் தொடக்கத்திலிருந்து முடிவுவரை இதன் படைப்பு செயலக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தார்.[4]

இணைப்பிற்குப் பிறகு மீடியாக்கார்ப் நிறுவனத்தில் மீண்டும் பணியில் சேர்ந்தார். இவர் 2005 ஆம் ஆண்டில் மீடியாக்கார்ப் சேனல் 8 இல் சீன நாடகங்களில் தோன்றினார். அதாவது 2005 ஆம் ஆண்டில் பெரிய பெற்றி பெற்ற "போர்ட்ரெய்ட் ஆஃப் ஹோம்" என்ற நாடகத்தில் இவரது விசித்திரமான "டாடி" என்ற பாத்திரச் சித்தரிப்பு இவருக்கு ஸ்டார் விருதுகள் 2005 சிறந்த நடிகருக்கான பரிந்துரையைப் பெற்றது.[5] மாண்டரின் மொழியை விட ஆங்கிலத்தில் நன்கு பேசுபவர் என்றாலும் இவர் இந்த பாராட்டுக்களைப் பெற்றார். உண்மையில், இவர் இந்த நிகழ்ச்சியில் நடிக்க மிகவும் சிரமப்பட்டதாக ஒப்புக்கொண்டார். மிகவும் மேற்கத்தியமயமாக்கப்பட்ட ஒருவரை விவரிக்க இவர் தன்னை மலாய் சொல்லில் 'கென்டாங்' என என்று வர்ணிக்கிறார்.

சொந்த வாழ்க்கை

தொகு

பாங், திரேசி கோவிட் என்பவரை மணந்தார். இவர்களுக்கு சாக் மற்றும் சாண்டர் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Spring Awakening By PANGDEMONiUM!". Archived from the original on 16 November 2012. பார்க்கப்பட்ட நாள் 4 October 2012.
  2. "Swimming with Sharks – Pangdemonium".
  3. "Adrian pang flunked A-Level Chinese". AsiaOne. 24 November 2009. http://www.asiaone.com/News/Education/Story/A1Story20091123-181676.html. 
  4. "Gratitude and optimism: Lessons from battling depression that Adrian Pang wants to share with NDP 2022 audiences". CNA (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 July 2023.
  5. "Asian Television Awards 2009 Winners" இம் மூலத்தில் இருந்து 14 November 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151114052045/http://ata.onscreenasia.com/2009-winners/. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்ரியன்_பாங்&oldid=3862413" இலிருந்து மீள்விக்கப்பட்டது