அந்தரியம் (ஆடை)
அந்தரியம் ( antarīya ) என்பது பண்டைய இந்தியாவில் பெண்களின் உடலின் இடுப்புக்கு கீழேயுள்ள பகுதிகளை மறைக்கப் பயன்படுத்தப்ப்ட்ட ஆடை வகையாகும். இது ஒரு நீளமான வெள்ளை அல்லது வண்ணப் பருத்தித்துணியைப் பட்டையாக, கால்கள் வழியாக, பின்புறம் வரித்துக்கட்டி, கால்களை தளர்வாக மூடி, பின் கால்களுக்கு முன்னால் நீண்ட மடிப்புகளாகப் கட்டி உடலை மறைக்கிறது. [1] [2] [3] [4]
வரலாறு
தொகுஇந்த அந்தரியம் எனப்படும் ஆடை, ராமாயணம் மற்றும் மகாபாரதம்[5] போன்ற இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டைய ஆடைகளில் ஒன்றாகும். [6] இந்திய துணைக் கண்டத்தில் உள்ள பல்வெறு சிற்பங்களில், குறிப்பாக இந்து கோயில்கள் மற்றும் பிற உருவப்படங்களில் இந்து தெய்வங்கள் உத்தரியம் எனப்படும் மேலாடைகள் மற்றும் அந்தாரியம் எனப்படும் கீழாடைகள் அணிந்திருப்பதைக் காணமுடியும்.[7][8][9]
6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பௌத்த பாலி இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சாரி ஷாடிகா (சன்ஸ்கிருதம்ஃ ஷாடிகா) என்பதும் பண்டைய காலத்தில் பெண்கள் அணிந்திருந்த மூன்று துண்டு உடைகளில் ஒன்றான அந்தாரியத்தின் பரிணாம வடிவமாகும்.
சொற்களஞ்சியம்
தொகுஅந்தாரியா என்ற சொல் சமஸ்கிருத வம்சாவளியைச் சேர்ந்ததாகும். [10].
பயன்பாடு
தொகுஅந்தாரியம் பொதுவாக மெல்லிய பருத்தி அல்லது பட்டுத்துணியைக் கொண்டு செய்யப்படும். இது பொதுவாக உத்தரியத்துடன் இணைந்தே பயன்படுத்தப்படும்.
படத்தொகுப்பு
தொகு-
சோளி ( மேலாடை) மற்றும் அந்தரியா சி. 320 CE , குப்தா பேரரசு)
-
1 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சிலையில், அந்தரியா மற்றும் உத்தரியா அணிந்துள்ள ஆண்கள்
மேற்கோள்கள்
தொகு- ↑ Keywords for India: A Conceptual Lexicon for the 21st Century. Bloomsbury Publishing. 2020-02-20.
- ↑ Sanskrit Play Production in Ancient India. Motilal Banarsidass Publ. 1995.
- ↑ Costumes and Ornaments as Depicted in the Sculptures of Gwalior Museum. Mittal Publications. 1987.
- ↑ Shastri, Ajay Mitra; Varāhamihira (1996). Ancient Indian Heritage, Varahamihira's India: Historical geography, religion, and society (in ஆங்கிலம்). Aryan Books International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7305-081-7.
- ↑ McLain, Karline (2009). India's Immortal Comic Books: Gods, Kings, and Other Heroes (in ஆங்கிலம்). Indiana University Press. p. 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-253-22052-3.
- ↑ Ancient India (in ஆங்கிலம்). Director General of Archaeology in India. 1950. p. 37.
- ↑ Agam Kala Prakashan, 1991 "Costume, coiffure, and ornaments in the temple sculpture of northern Andhra", p. 118
- ↑ Prachya Pratibha, 1978 "Prachya Pratibha, Volume 6", p. 121
- ↑ Prasad Mohapatra, Ramesh (1992). Fashion Styles of Ancient India: A Study of Kalinga from Earliest Times to Sixteenth Century Ad. B.R. Publishing Corporation. p. 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170187233.
- ↑ www.wisdomlib.org (2018-05-06). "Antariya, Antarīya: 7 definitions". பார்க்கப்பட்ட நாள் 2020-12-09.